News October 12, 2025

ஆம்புலன்ஸ் காத்திருப்பு நேரம் குறைப்பு

image

தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையின் காத்திருப்பு நேரம் சராசரியாக 7:57 நிமிடமாக குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் 5 நிமிடம், செங்கல்பட்டு, கடலூரில் 7 நிமிடம், பிற மாவட்டங்களில் 8 நிமிடத்திற்குள்ளும் ஆம்புலன்ஸ் சேவை கிடைப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதிக விபத்து நடக்கும் பகுதிகள் கண்டறியப்பட்டு, அங்கெல்லாம் ஆம்புலன்ஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 108 சேவை பற்றி உங்கள் கருத்து என்ன?

Similar News

News October 12, 2025

சாக்லேட் ஸ்வீட்டி சாக்‌ஷி அகர்வால் கிளிக்ஸ்

image

கற்பனைக்கும் எட்டாத அழகிய கருவிழி, அதன் மேல் வித்தை காட்டும் வில் போன்ற கருமை நிறம் கொண்ட புருவங்கள், மனம் மயங்கும் மணம் கொண்ட அடர் கருப்பு நிற தலைமுடி என்று சில அங்கங்களில் மட்டுமே உள்ள கருமையே கவர்ந்திழுக்கும். ஆனால், இன்று சாக்‌ஷியோ, பேரழகை வெட்கத்தோடு போர்த்தியிருக்கும் புடவை, சிணுங்கல் ஓசை கொண்ட வளையல் என அனைத்திலும் கருமையை வைத்து கிறங்கடித்துள்ளார். சாக்‌ஷியின் அழகுக்கு லைக்ஸ் போடுங்க.

News October 12, 2025

இந்திய வீராங்கனைகளுக்கு பெருமை சேர்ந்த ஆந்திரா

image

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய முன்னாள் கேப்டன் மித்தாலியை ஆந்திர மாநில அரசு கௌரவித்துள்ளது. இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்தியா – ஆஸ்திரேலியா உலகக்கோப்பை போட்டியின் போது அவரது பெயரில் கேலரி ஒன்று திறக்கப்பட்டது.
அதேபோல் விக்கெட் கீப்பர் ரவி கல்பனா பெயரும் ஒரு கேலரிக்கு சூட்டப்பட்டு பெருமை சேர்க்கப்பட்டுள்ளது.

News October 12, 2025

ஒரு முறை மட்டுமே… அது எது?

image

`ஒரு கொடியில் ஒரு முறைதான் மலரும் மலரல்லவா’ என்று காதலை கவிஞர்கள் வர்ணித்தாலும், காதலும் பலமுறை மலரலாம். ஆனால், சில பொருள்களை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும். இரண்டாம் முறை என்பது சாத்தியமே இல்லை அல்லது பயன்படுத்தவே கூடாது. அப்படிப்பட்ட பொருள்களில் சிலவற்றை மேலே உள்ள படங்களில் காணலாம். உங்களுக்கு தெரிந்த, ஒருமுறை மட்டுமே பயன்படும் பொருள்களை கமெண்ட்டில் சொல்லுங்களேன்.

error: Content is protected !!