News April 20, 2024
தொண்டை கரகரப்பு, இருமல் பாதிப்பு குறைய…

சுற்றுச்சூழல் மாசுபாடுகள் போன்ற பல காரணங்களால் ஏற்படும் தொண்டை சார்ந்த பிரச்சனைகளான தொண்டை வலி, தொண்டை தொற்று அல்லது அழற்சிக்கு சுடு நீரில் உப்பு போட்டு வாய் கொப்பளிப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் இந்த உப்பு நீர், தொண்டை வலி அல்லது எரிச்சல் தொடர்புடைய தொல்லைகளில் இருந்தும் நிவாரணம் அளிக்கிறது. சளி, சைனஸ் தொற்றுகளை தடுக்கவும் இந்த உப்பு கரைசல் உதவி புரிகிறது.
Similar News
News February 1, 2026
பட்ஜெட் எதிரொலி: பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி!

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியடைந்துள்ளன. சென்செக்ஸ் 2,000 புள்ளிகள் குறைந்து 80,663 புள்ளிகளிலும், நிஃப்டி 638 புள்ளிகள் குறைந்து 24,780 புள்ளிகளிலும் வர்த்தகமாகின்றன. பங்குகளை வாங்குவது, விற்பதற்குமான வரி உயர்வால் முதலீட்டாளர்கள் பீதியடைந்துள்ளனர். பங்குகளை வாங்கி விற்பதற்கான வரி 0.02%-லிருந்து 0.05% அதிகரிக்கப்படும் என FM நிர்மலா தெரிவித்துள்ளார்.
News February 1, 2026
Budget: வேலைவாய்ப்புகளை அதிகரிக்க அரசின் முயற்சி

இந்தியாவுக்கு வெளியே வசிக்கும் தனிநபர்கள் (PROI) இந்திய நிறுவனங்களின் பங்குகளில் போர்ட்ஃபோலியோ முதலீட்டுத் திட்டம் மூலம் நேரடியாக முதலீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வெளிநாட்டவர் ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்யக்கூடிய அதிகபட்ச அளவு 5% இருந்து 10 சதவீதமாக உயர்த்தப்பட உள்ளது. இதன்மூலம் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கலாம், நிறுவனங்களுக்கு புதிய மூலதனம் கிடைக்கும், வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.
News February 1, 2026
இந்தியாவில் 3 இடங்களில் ஆயுர்வேத பயிற்சி மையம்

மருத்துவ சுற்றுலாவை அதிகரிக்க நாடு முழுவதும் 5 மண்டலங்களில் மருத்துவ சுற்றுலா மையங்கள் உருவாக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாட்டில் 3 இடங்களில் சர்வதேச தரத்தில் ஆயுர்வேத பயிற்சி மையம் நிறுவப்படும் எனவும், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ஆயுர்வேத மருந்துகளை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


