News May 15, 2024
மன்னிப்பு கேட்டது REDPIX நிறுவனம்

பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய புகாரில் யூடியூபர் சவுக்கு சங்கரும், அவரை பேட்டியெடுத்ததாக REDPIX யூடியூப் சேனல் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், சவுக்கு சங்கரின் சர்ச்சைக்குரிய பேச்சில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றும், அந்த காணொளியால் பெண் காவலர்கள் வருத்தமடைந்துள்ளதால் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் REDPIX நிறுவனம் அறிவித்துள்ளது.
Similar News
News December 3, 2025
குமரியில் நாளை பல்வேறு பகுதிகளில் கரண்ட் கட்

வடசேரி, ஆசாரிபள்ளம் மற்றும் தடிகாரண்கோணம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள்
காரணமாக நாளை (டிச.04) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை பார்வதிபுரம், கட்டையன்விளை, பெருவிளை, இறச்சகுளம், புத்தேரி, வீரநாரயணமங்கலம் , அருமநல்லூர், திடல், கீரிப்பாறை, அழகியபாண்டியபுரம், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 3, 2025
BREAKING: விடுமுறை அறிவித்தார் கலெக்டர்

கனமழை எதிரொலியாக மேலும் ஒரு மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, புதுச்சேரிக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது விழுப்புரம் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே, குமரி, தி.மலை மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
News December 3, 2025
Sports 360°: இந்திய டி20 அணி இன்று அறிவிப்பு

*SA-க்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படுகிறது *SMAT தொடரில், கர்நாடகாவிடம் 145 ரன்கள் வித்தியாசத்தில் தமிழகம் படுதோல்வி *அயர்லாந்துக்கு எதிரான 3-வது டி20-ல் வங்கதேசம் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி *நட்பு கால்பந்து போட்டியில் இந்தியா U-20 அணி 4-2 என்ற கோல் கணக்கில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்தியது *WI-க்கு எதிரான முதல் டெஸ்ட்டின், முதல் இன்னிங்ஸில் NZ 231 ரன்களுக்கு ஆல் அவுட்


