News April 2, 2025
அப்பாவான ரெடின் கிங்ஸ்லி!

பிரபல காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி – நடிகை சங்கீதா ஆகியோருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2023ஆம் ஆண்டு இத்தம்பதிகள் காதலித்து பெரியோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு குழந்தை பிறந்துள்ள நிலையில், திரைத்துறையினரும், ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அண்மையில் சங்கீதாவுக்கு நடந்த வளைகாப்பு போட்டோஸ் வைரலானது.
Similar News
News April 3, 2025
இஸ்லாமியர்களை பயமுறுத்தும் திமுக: நயினார் நாகேந்திரன்

மத்திய அரசு எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் திமுக திட்டமிட்டு எதிர்ப்பதாக நயினார் நாகேந்திரன் சாடியுள்ளார். பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா விவகாரத்தில், பேரவையை போராட்டக் களமாக <<15975951>>CM ஸ்டாலின்<<>> மாற்றிவிட்டதாகக் குற்றம்சாட்டினார். மேலும், இஸ்லாமியர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் மாநில அரசு செயல்படுவதாகவும் விமர்சித்தார்.
News April 3, 2025
லாலு பிரசாத் கவலைக்கிடம்

பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் (76) உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இருதய நோயாளியான அவருக்கு, வேறு சில உடல் உபாதைகளும் உள்ளன. பாட்னா ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதனையடுத்து, ஏர் ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ்-க்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
News April 3, 2025
மூக்கையாவுக்கு மணிமண்டபம்; கார்ல் மார்க்ஸூக்கு சிலை

உசிலம்பட்டியில் வி.கே.மூக்கையா தேவருக்கு மணி மண்டபம் அமைக்கப்படும் என CM ஸ்டாலின் தெரிவித்தார். பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டு உரையாற்றிய அவர், நியாயத்திற்கு ஒரு மூக்கையா என அண்ணா புகழாரம் சூட்டியதை நினைவுகூர்ந்தார். அதே போல், கார்ல் மார்க்ஸ் சிலையும் சென்னையில் நிறுவப்படும் என அறிவித்தார்.