News April 25, 2025
வசூல் வேட்டையாடும் ‘ரெட் டிராகன்’..!

அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி படம் தமிழ்நாட்டில் மட்டும் 2 வாரங்களில் செய்த வசூல் விவரம் வெளியாகியுள்ளது. மாஸ் காட்சிகளுக்கு பஞ்சமில்லாமல் வெளியாகி அஜித் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற இப்படம், உலகளவில் ₹200 கோடி வசூலை கடந்துவிட்டதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் 2 வாரங்களில் ₹172.3 கோடி வசூலித்துள்ளதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News April 25, 2025
CSK vs SRH: பிளே ஆஃப் ரேஸில் நீடிக்கப் போவது யார்?

புள்ளிப்பட்டியலில் கடைசி 2 இடங்களில் உள்ள CSK, SRH அணிகளுக்கு இனிவரும் அனைத்து போட்டிகளுமே வாழ்வா சாவா ஆட்டம்தான். இரு அணிகளும் இந்த சீசனில் 8 போட்டிகளில் விளையாடி தலா 2 வெற்றிகளை பெற்றுள்ளன. இந்நிலையில், சேப்பாக்கம் மைதானத்தில் இரு அணிகளும் இன்றிரவு மல்லுக்கட்ட உள்ளன. இதில், தோல்வி அடையும் அணிக்கு பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு மங்கும். இன்றைய போட்டியில் CSK ஜெயிக்குமா?
News April 25, 2025
போரை நிறுத்துங்கள்.. புடினிடம் வலியுறுத்திய ட்ரம்ப்!

உக்ரைனை உடனான போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என ரஷ்ய அதிபர் புடினிடம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து சோஷியல் மீடியாவில் பதிவிட்ட அவர், கீவ் நகர் மீதான ரஷ்யாவின் தாக்குதல் வருத்தமளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ‘மிகவும் மோசமான நேரம். புதின் நிறுத்துங்கள். போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொள்ளலாம்’ எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.
News April 25, 2025
மாணவர் சேர்க்கை அதிகரிக்க இதை பண்ணுங்க: அன்புமணி

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். 2025- 26ம் கல்வியாண்டில் 5 லட்சம் மாணவர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 1.5 லட்சம் மாணவர்கள் மட்டுமே சேர்ந்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். போதிய ஆசிரியர்கள் இல்லாததும் இதற்கு காரணம் எனத் தெரிவித்த அன்புமணி, இதனை உடனே சரி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.