News October 16, 2024

சென்னைக்கு ரெட் அலர்ட் வாபஸ்!

image

கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து விலகியதால், இன்று எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. மேலும், தாழ்வு மண்டலம் சென்னை – நெல்லூர் இடையே நாளை கரையை கடக்கிறது. அப்போதும் கனமழை பெய்யாது என்பதால், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Similar News

News August 15, 2025

ரத்தமும் தண்ணீரும் ஒன்றாக ஓடாது: PM மோடி ஆவேசம்

image

பஹல்காமில் மதத்தின் அடிப்படையில் தாக்குதல் நடத்தியவர்களுக்கு இந்தியா பதிலடி கொடுத்து அவர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளதாக சுதந்திர தின உரையில் PM மோடி குறிப்பிட்டுள்ளார். செங்கோட்டையில் ஆவேசமாக பேசிய அவர், பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டல்கள் நம்மிடம் எடுபடாது என்றார். சிந்து நதி இந்திய விவசாயிகளுக்கு சொந்தமானது எனவும் அதனை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம், ரத்தமும் தண்ணீரும் ஒன்றாக ஓடாது என்றார்.

News August 15, 2025

SPORTS ROUNDUP: விதிமீறல்.. SA வீரரை தண்டித்த ICC!

image

◆சின்சினாட்டி ஓபன்: ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜானிக் சின்னர் அரையிறுதிக்கு முன்னேறினார்.
◆2-வது T20-யில் ஆஸி. வீரரின் Ben Dwarshuis-ன் விக்கெட்டை வீழ்த்திய SA வீரர் கார்பின் போஷ், விதியை மீறி கொண்டாடியதால், அவருக்கு ICC ஒரு Demerit பாயிண்ட் கொடுத்துள்ளது.
◆WI-க்கு எதிராக தொடரை இழந்த PAK. அணி வீரர்கள் சொந்த ரெக்கார்டுக்காக விளையாடுவதால் தான் தோல்வி என Ex வீரர் சோயிப் அக்தர் விமர்சனம்.

News August 15, 2025

மக்களாட்சி நிலைக்க உறுதியேற்போம்: EPS

image

நாட்டின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு EPS தனது வாழ்த்துகளை தமிழக மக்களுக்கு தெரிவித்துள்ளார். நாடு விடுதலை பெற போராடி தன் இன்னுயிர் நீத்த தியாகச் செம்மல்களை, போற்றி வணங்கி நினைவுகூர்வதாக EPS தெரிவித்துள்ளார். மேலும், குடும்ப ஆட்சி எனும் மன்னராட்சி அகற்றப்பட்டு, முன்னோர்கள் போராடி பெற்ற மக்களாட்சி நிலைத்திட, நல்லாட்சி அமைத்திட உறுதியேற்போம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!