News November 25, 2024
தமிழ்நாட்டிற்கு ரெட் அலர்ட்

வங்கக் கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாளையும் (26.11.24) நாளை மறுநாளும் (27.11.24) தமிழ்நாட்டிற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்திருக்கிறது. அப்படியானால், 12 முதல் 20 செ.மீ. வரை மழைப்பொழிவு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும். வியாழக்கிழமைக்கு (28.11.24) ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 27, 2025
தங்கம் விலை தாறுமாறாக மாறியது

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ்(28g) தங்கம் $20.51 உயர்ந்து, $4,162.94-க்கு விற்பனையாகி வருகிறது. இது இந்திய சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாள்களாக இந்தியாவில் தங்கத்தின் விலை ஏற்றத்தை கண்டு வருகிறது. நேற்று (நவ.26) மட்டும் சவரனுக்கு ₹640 உயர்ந்து, ₹94,400-க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
News November 27, 2025
ஈரோட்டில் மக்கள் சந்திப்பை நடத்துகிறாரா விஜய்?

MLA பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன், இன்று தவெகவில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், KAS-ன் சொந்த மாவட்டமான ஈரோட்டில் அடுத்த மக்கள் சந்திப்பை நடத்த விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோபியில், நவ.30-ல் EPS பரப்புரை மேற்கொள்ளவுள்ள நிலையில், விஜய்யும் கொங்கு மண்ணில் கால் பதிக்கவுள்ளார். இதற்கான அனுமதி வாங்கும் பணிகளை தவெகவினர் மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
News November 27, 2025
மாபெரும் சாதனை படைத்த சஞ்சு சாம்சன்!

சையது முஷ்டாக் அலி கோப்பையில், கேரள ஓப்பனர்கள் சஞ்சு சாம்சன் & ரோகன் குன்னும்மாள் முதல் விக்கெட்டுக்கு 177 ரன்களை குவித்து சாதனை படைத்துள்ளனர். ஒடிசாவுக்கு எதிரான ஆட்டத்தில், ரோஹன் 10 சிக்ஸர்களுடன் 121(60)* ரன்களை விளாச, சஞ்சு 51*(41) ரன்கள் அடித்தார். தொடர் வரலாற்றில் இதுவே அதிகபட்ச ஓப்பனிங் பார்ட்னர்ஷிப். இப்போட்டியில், ஒடிசா 20 ஓவரில் 176/7 ரன்கள் எடுக்க, கேரளா 16.3 ஓவரில் வெற்றி பெற்றது.


