News October 22, 2025

4 மாவட்டங்களுக்கு இன்று ‘ரெட் அலர்ட்’

image

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று(அக்.22) அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. இதனால், அந்த மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ வார்னிங் விடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மழை நேரத்தில் பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

Similar News

News January 14, 2026

இந்திய விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் டிரம்ப்

image

ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25% கூடுதல் வரிவிதிக்கப்படும் என <<18842996>>டிரம்ப்<<>> அறிவித்துள்ளார். இதனால் இந்திய விவசாயிகள், அரசி ஏற்றுமதியாளர்கள் கடுமையான பாதிக்கப்படுவார்கள் என அஞ்சப்படுகிறது. ஈரான் அதன் மொத்த அரசி தேவையில், மூன்றில் இரண்டு பங்கை இந்தியாவிடம் வாங்குகிறது. ஏற்கனவே கடந்த 2 மாதங்களில் அனுப்பப்பட்ட அரிசிக்கான பணம் இன்னும் வந்து சேரவில்லை என ஏற்றுமதியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

News January 14, 2026

ஜனவரி 14: வரலாற்றில் இன்று

image

*போகி பண்டிகை. *1761 – 3-ம் பானிபட் போர் ஆப்கானியர்களுக்கும் மராட்டியர்களுக்கும் இடையில் நடைபெற்றது. இதில் ஆப்கானியர்களின் வெற்றி இந்திய வரலாற்றில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. *1974 – திருச்சி, தஞ்சை மாவட்டங்களிலிருந்து பிரித்து புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டது. *1951 – ஓ. பன்னீர்செல்வம் பிறந்தநாள்.

News January 14, 2026

வங்கதேசத்திற்கு அதிர்ச்சி கொடுத்த ICC

image

T20WC: பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி, இந்தியாவில் நடைபெறும் போட்டிகளை மாற்ற கோரிக்கை வைத்த வங்கதேசத்திற்கு ஐசிசி, ‘NO மாற்றமுடியாது’ என்று கூறியுள்ளது. போட்டி திட்டங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டதால் வங்கதேசம் தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யும்படி ஐசிசி கேட்டுக்கொண்டுள்ளது. ஆனால், விடாப்பிடியாக வங்கதேசம் தொடர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது.

error: Content is protected !!