News June 18, 2024
பள்ளிகளில் சாதி வன்முறையை தடுக்க பரிந்துரை

அரசு பள்ளிகளில் சாதி அடையாளங்களை உடனடியாக நீக்க நீதிபதி சந்துரு குழு அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. அதில், மாணவர்களின் வருகை பதிவேட்டில் சாதிப் பெயர் இடம்பெறக்கூடாது, வகுப்பறைகளில் மாணவர்களை பெயர் வரிசைப்படி மட்டுமே அமர வைக்க வேண்டும், குறிப்பிட்ட சாதி ஆதிக்கம் உள்ள பகுதிகளில் அதே சமூகத்தினரை பள்ளித் தலைமை ஆசிரியர்களாக நியமிக்கக்கூடாது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை அவர் வழங்கியுள்ளார்.
Similar News
News April 3, 2026
சம்பளத்துடன் கூடிய விடுமுறை: ECI உத்தரவு

தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அந்தந்த மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் நாளில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என ECI உத்தரவிட்டுள்ளது. இது அரசு, பொது & தனியார் துறை என அனைத்து ஊழியர்களுக்கும் பொருந்தும். ஒருவேளை விடுமுறை அளிக்கப்படாவிடில், தொழிலாளர் நலத்துறை மூலம் அந்தந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
News April 3, 2026
ஜெகத்ரட்சகன் சொத்து பறிமுதல் ரத்து: SC

திமுக எம்பி ஜெகத்ரட்சகனின் சொத்துகளை பறிமுதல் செய்த உத்தரவை SC ரத்து செய்துள்ளது. சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக 2020-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாக ED சோதனை நடத்திய நிலையில், கோர்ட் உத்தரவின்படி ₹89.19 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், SC இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
News April 3, 2026
துணை வேட்புமனுவை நாளை தாக்கல் செய்கிறார் விஜய்

விஜய், தனது பெரம்பூர் வேட்புமனுவில் மதுரை மாநாடு வழக்கு குறித்து குறிப்பிடவில்லை. இதனால் அவரது மனு நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக பேசப்பட்டது.. இந்நிலையில் பெரம்பூர் தொகுதியில் திருத்தப்பட்ட மனுவை மீண்டும் அவர் தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் <<19552701>>மதுரை மாநாட்டின்<<>> போது மீது பதியப்பட்ட வழக்கு உள்பட விடுப்பட்ட தகவல்களை நாளை விஜய் தாக்கல் செய்ய உள்ளார்.


