News March 20, 2025
பேரிடரில் வெயிலை சேர்க்க பரிந்துரை

பேரிடர் மேலாண்மை திட்டங்களில் வெப்ப அலைகள் போன்ற புதிய பேரிடர்களை சேர்க்க வேண்டும் என நாடாளுமன்ற குழு பரிந்துரைத்துள்ளது. மேலும் பேரிடர் மேலாண்மை சட்டம் பொருத்தமானதாகவும், வளர்ந்து வரும் பேரிடர் அபாயங்களுக்கு ஏற்பவும் இருக்க வேண்டும். வல்லுநர்கள் குழுவுடன் ஆலோசித்து பேரிடர் பட்டியலை அவ்வப்போது மதிப்பாய்வு செய்து புதுப்பிக்கும் வழிமுறையையும் நிறுவ வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Similar News
News March 20, 2025
மரணம்தான் அவர்கள் முன் உள்ள ஒரே வழி: ப.சி., வேதனை

நேற்று முன்தினம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட 436 பேரில், 183 குழந்தைகள் மற்றும் 94 பெண்கள் என ப.சிதம்பரம் வேதனை தெரிவித்துள்ளார். போர் நிறுத்தம், அமைதிக்கு இந்த படுகொலைகள் தீர்வாகுமா என வினவியுள்ள அவர், ஹமாஸ்- இஸ்ரேல் இடையிலான போரில், காசா மக்கள்தான் பாதிக்கப்படுவதாக கூறியுள்ளார். அம்மக்களுக்கு இருக்கும் ஒரே வழி மரணிப்பதுதான் என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
News March 20, 2025
யூடியூப் பார்த்து எவரெஸ்ட் சிகரம் ஏறிய சிங்கப்பெண்!

உலகின் உயர்ந்த சிகரமான எவரெஸ்டில் ஏறுவது மலையேற்ற வீரர்களின் கனவு. நன்கு பயிற்சி பெற்றவர்களுக்கே எவரெஸ்டில் ஏறுவது கடினமான ஒன்று. ஆனால், கேரளாவைச் சேர்ந்த வசந்தி(59), யூடியூப் வீடியோக்களை மட்டுமே பார்த்து எவரெஸ்டின் Base Camp-க்கு சென்று அசத்தியுள்ளார். கணவரை இழந்து தையல் தொழில் செய்துவரும் இவர், அனைத்து பெண்களுக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறார். சாதனை படைத்த வசந்தி நிஜமாகவே சிங்கப் பெண்தான்!
News March 20, 2025
தடையை தகர்த்த ஷகிப் அல் ஹசன்

சந்தேகத்திற்குரிய வகையில் பந்து வீசுவதாக கூறி, வங்கதேச ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் பந்து வீச ஐசிசி தடை விதித்திருந்தது. இதனால் அவர் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டது. ஆனாலும் துவண்டு போகாத ஷகிப், பல கட்ட முயற்சிக்கு பின் பந்துவீச்சை சரி செய்தார். அதன் தொடர்ச்சியாக 3ஆவது முறை சோதனையில் விதிமுறைக்கு உட்பட்டு பந்து வீசினார். இதனால் அவர் மீதான தடை விலக்கிக் கொள்ளப்பட்டது.