News April 21, 2025
7 HC நீதிபதிகளை பணியிட மாறுதல் செய்ய பரிந்துரை

7 உயர்நீதிமன்ற நீதிபதிகளை பணியிட மாறுதல் செய்ய சுப்ரீம் கோர்ட் கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான கொலிஜீயம் நேற்று முன்தினம் கூடி ஆலோசனை நடத்தியது. அப்பாேது இந்த முடிவை எடுத்தது. கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் சந்தன்கௌடர், தெலுங்கானா உயர்நீதிமன்ற நீதிபதி கசோஜு சுரேந்தர் ஆகியோரை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற பரிந்துரைத்துள்ளது.
Similar News
News January 7, 2026
வாட்டர் ஹீட்டர்.. சகோதரிகள் இறந்து போனார்கள்

வாட்டர் ஹீட்டர் ராடை பயன்படுத்தும் போது மிகுந்த கவனம் தேவை என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். இரும்பு பக்கெட்டை தவிர்த்துவிட்டு பிளாஸ்டிக் பக்கெட்டை மட்டுமே பயன்படுத்துங்கள். அதேபோல், ஹீட்டர் ராடு சூடாகும் போது தண்ணீரை தொடாதீர்கள். உ.பி.,யில் அண்மையில், ஹீட்டர் ராடை தெரியாமல் தொட்ட லட்சுமி மற்றும் நிதி என்ற சகோதரிகள் துடிதுடித்து உயிரிழந்த நிலையில், நிபுணர்களின் ஆலோசனைகள் SM-ல் வைரலாகின்றன.
News January 7, 2026
முட்டை விலை குறைந்தது

டிசம்பரில் வரலாறு காணாத உச்சத்தை எட்டிய முட்டை கொள்முதல் விலை, ஜனவரியில் படிப்படியாக சரியத் தொடங்கியுள்ளது. கடந்த 3 நாள்களில் 40 காசுகள் குறைந்த நிலையில், இன்று மேலும் 20 காசுகள் சரிந்துள்ளது. நாமக்கல்லில் தற்போது 1 முட்டையின் கொள்முதல் விலை ₹5.80-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சில்லறை விலையில் 1 முட்டை ₹8 வரை விற்கப்பட்டு வரும் நிலையில், இனி விலை குறைய வாய்ப்புள்ளது.
News January 7, 2026
மகளிர் உரிமைத்தொகை 1000.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பெண்கள், மேல்முறையீடு செய்யலாம் என அமைச்சர் சக்கரபாணி அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். முதலில் அருகில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்றால், மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட காரணத்தை சொல்வார்கள். ஒருவேளை அவர்கள் சொல்லும் காரணம் தவறானது என்றால், அங்கேயே மகளிர் உரிமைத்தொகை ₹1000 பெற மேல்முறையீடு செய்யலாம் என்று கூறியுள்ளார்.


