News October 27, 2024

Recipe: சாமை கல்கண்டு பாத் செய்வது எப்படி?

image

சாமை அரிசி, பயத்தம் பருப்பு ஆகியவற்றை நீரில் கழுவவும். பின் அதை வாணலியில் ஒன்றாக கொட்டி பொன்னிறமாக மாறும் வரை வறுத்து, சலித்து எடுக்கவும். பின் குக்கரில் போட்டு பாலூற்றி 5 விசில் வரை வேக விடவும். இந்த கலவையில் நெய் & பனங்கற்கண்டு பொடியை சேர்த்து கிளறவும். நன்கு கொதித்து, நீர் வற்றியதும் நெய்யில் வறுத்த பாதாம், முந்திரி, ஏலக்காய் பொடி சேர்த்து இறக்கினால் சுவையான சாமை கல்கண்டு பாத் ரெடி.

Similar News

News July 9, 2025

மாலை 6 மணி வரையிலான தலைப்புச் செய்திகள்

image

<<17005460>>✪கடலூர் விபத்துக்கு<<>> கேட் கீப்பர் தூங்கியதே காரணம்

✪<<17007676>>குஜராத்தின் வதோதராவில் <<>> பாலம் இடிந்து விழுந்ததில் 10 பேர் பலி

✪<<17005030>>யோகா செய்து PM<<>> மோடிக்கு வரவேற்பளித்த நமீபியா

✪<<17004947>>4G, 5G ஸ்மார்ட்<<>> போன்களின் விலைகளை நிறுவனங்கள் குறைக்க உள்ளதாக தகவல்

✪<<17007716>>3-வது டெஸ்டில்<<>> களமிறங்கும் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர்

News July 9, 2025

மகாராஷ்டிராவை போன்று பிஹாரிலும் பாஜக சதி: ராகுல்

image

ECI உதவியோடு மகாராஷ்டிராவை போன்று பிஹார் தேர்தலிலும் முறைகேடு செய்ய பாஜக சதி செய்வதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். அம்மாநிலத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தும் பணியை ECI மேற்கொண்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற கடையடைப்பு போராட்டத்தில் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பேசிய அவர், ஏழை வாக்காளர்களை Voter List-ல் இருந்து நீக்க வாய்ப்புள்ளது என்றார்.

News July 9, 2025

₹10 யாசகம் போட்ட பெண்.. ரஜினிகாந்த் பேச்சு வைரல்

image

தனக்கு பெண் ஒருவர் ₹10 யாசகம் போட்டதாக ரஜினி பேசிய பழைய வீடியோ வைரலாகி வருகிறது. பெங்களூருவில் உள்ள கோயிலுக்கு தாம் மாறு வேடத்தில் சென்று இருந்ததாகவும், அப்போது அங்கு வந்த பெண் தன் உருவத்தை பார்த்து பிச்சை எடுப்பவர் என கருதி ₹10 அளித்ததாகவும், அதை மறுக்காமல் தாம் வாங்கிக் கொண்டதாகவும், பிறகு உண்டியலில் தாம் ₹200 போட்டதை பார்த்து அவர் தன்னிடம் வருத்தம் தெரிவித்தாகவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!