News October 24, 2024
Recipe: சிவப்பு சோளம் புட்டு செய்வது எப்படி?

சிவப்பு சோளம், அவல், முந்திரி (தலா ஒரு கப்) ஆகியவற்றை வாசனை வரும் வரை வறுத்து, ஆற வைத்து, மாவு பதத்திற்கு அரைக்கவும். இந்த மாவில் உப்பு நீர் தெளித்து, உதிரியாக உடைத்து கொள்ளவும். பிறகு சூடான இட்லி பாத்திரத்தில் துணி போட்டு, அதன் மேல் மாவை பரப்பி 20 நிமிடங்கள் வரை நன்கு வேக வைத்து எடுக்கவும். அதை பாத்திரத்தில் கொட்டி தேங்காய், நெய், பனைவெல்லம் சேர்த்து கிளறினால், சுவையான சிவப்பு சோளம் புட்டு ரெடி.
Similar News
News January 14, 2026
தங்கம் விலை மீண்டும் குறைந்தது

சர்வதேச சந்தையில் கடந்த சில தினங்களாக உயர்ந்து வந்த தங்கம் இன்று(ஜன.14) சற்று குறைந்துள்ளது. 1 அவுன்ஸ்(28g) $11 குறைந்து $4,597-க்கு விற்பனையாகிறது. அதேநேரம் வெள்ளி விலை 1 அவுன்ஸ் $3 உயர்ந்து $88 ஆக உள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை சரிவால் இந்திய சந்தையில் தங்கம் விலை சற்று குறைய வாய்ப்புள்ளது.
News January 14, 2026
போகி பண்டிகையில் இந்த வழிபாடு கட்டாயம்!

போகி பண்டிகை நாளான இன்று, அதிகாலையில் பலரும் வீட்டு வாசலில் பழைய பொருள்களை தீயில் இட்டு கொண்டாடி இருப்பீர்கள். இத்துடன் வீட்டின் பூஜை அறையில் விளக்கேற்றி, மழைக்கு அதிபதியான இந்திர தேவனையும் வழிபட வேண்டும். அதே நேரத்தில், குலதெய்வ வழிபாடு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. ஏதேனும் வேண்டுதல் இருந்தால், ₹1 நாணயத்தை மஞ்சள் துணியில் முடிந்து குலதெய்வத்தின் முன் வைத்து வழிபடலாம். SHARE IT.
News January 14, 2026
வாழ்க்கையை மாற்றும் தினசரி பழக்கங்கள்

அன்றாடம் நாம் கடைபிடிக்கும் சில பழக்கங்கள் நமது உடல் மற்றும் மனநல ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சில பழக்கங்களை தினமும் தொடர்ந்து கடைபிடித்தால், நமது ஒட்டுமொத்த வாழ்க்கையும் மேம்படும். அவை என்னென்ன பழக்கங்கள் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.


