News October 9, 2025
Recipe: பப்பாளிப் பழ அவல் கேசரி செய்யலாம் வாங்க!

வாணலியில் வெள்ளை அவலை நன்றாக வறுத்து, ரவை பதத்தில் அரைத்து தூளாக்கவும். அடிகனமான கடாயில் 2 தேக்கரண்டி நெய், கொதிக்க வைத்த பாலை ஊற்றி, பப்பாளிக் கூழ், சர்க்கரை, பொடித்த அவல், ஏலக்காய் பொடி, பச்சைக் கற்பூரம் சேர்த்துக் கிளறவும். அடுப்பை சிம்மில் வைத்து, இந்த கலவையில் நெய்யில் பொன்னிறமாக வறுத்த முந்திரி, பாதாம், வெள்ளரி விதையை சேர்த்து இறக்கினால் சுவையான பப்பாளிப் பழ அவல் கேசரி ரெடி. SHARE IT.
Similar News
News October 9, 2025
காசா அமைதி திட்டத்தை வரவேற்கிறேன்: PM மோடி

அமைதி திட்டத்தின் முதல் கட்டத்திற்கு இஸ்ரேலும், ஹமாஸும் கையெழுத்திட்ட நிலையில் PM மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார். டிரம்ப்பின் முயற்சியையும் பாராட்டிய அவர், இந்த ஒப்பந்தம் PM நெதன்யாகுவின் வலுவான தலைமைக்கு ஒரு பிரதிபலிப்பு என தெரிவித்துள்ளார். பணயக்கைதிகள் விடுவிப்பு மற்றும் காசா மக்களுக்கு கிடைக்கும் மனிதாபிமான உதவிகள், நீடித்த அமைதிக்கு வழிவகுக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
News October 9, 2025
உலகின் துயரத்தை போக்கவே ராமாயணம்: மோகன் பகவத்

உலகின் துயரத்தை போக்கவே வால்மீகி ராமாயணத்தை படைத்ததாக RSS தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். பகவான் ராமர் எப்போதும் நம்முடன் இருந்தாலும், அவரை அனைவரது வீடுகளுக்கும், வாழ்க்கையிலும் கொண்டு சென்றது வால்மீகி தான் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், இந்த பாரம்பரியத்தை மனித குலம் பொறுப்புணர்வுடன் முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
News October 9, 2025
அரசுத் துறையில் வேலை; ₹35,000 வரை சம்பளம்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் 1096 பணியிடங்கள் உள்ளன. Block Coordinator, Special Educator, Case Manager, Occupational Therapist பணிகளுக்கு ₹35,000 வரை சம்பளம் கிடைக்கும். இதற்கு M.A.Physiotherapy/Occupational Therapy/psychology முடித்திருக்க வேண்டும். ₹12,000 வரை கிடைக்கும் Office Helper, Sanitation & Security-க்கு 10th Pass போதும். அக்.14-க்குள் <<-1>>tnrightsjobs<<>> -ல் அப்ளை பண்ணுங்க.SHARE.