News September 30, 2025
RECIPE: தினை ஆப்பம் செய்வது எப்படி?

*தினை, இட்லி அரிசி, உளுந்து & வெந்தயம் ஆகியவற்றை 4 மணி நேரம் ஊற வைக்கவும் *இதில், துருவிய தேங்காய் சேர்த்து நைசாக அரைக்கவும் *பச்சரிசியை தனியாக ஊறவைத்து, மோர் பதத்திற்கு அரைக்கவும் *இதை மிதமான தீயில் கிளறி, மாவு பசை பதத்திற்கு இறுகும் போது, உப்பு சேர்க்கவும் *இது ஆறிய பிறகு, அரைத்த ஆப்ப மாவுடன் இதனை சேர்க்கவும் *இதை மிருதுவதாக சுட்டு எடுத்தால், சுவையான தினை ஆப்பம் ரெடி. SHARE.
Similar News
News September 30, 2025
Windows 10 யூஸ் பண்றீங்களா.. இத கவனியுங்க!

அக்டோபர் 14-ம் தேதியுடன், Windows 10 OS-க்கு வழங்கிய Backend Support-ஐ நிறுத்துவதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. இனி பயனர்களுக்கு செக்யூரிட்டி அப்டேட், technical support போன்ற சேவைகள் நிறுத்தப்படும். ஜூலை 2015-ல் அறிமுகம் செய்யப்பட்ட Windows 10, 140 கோடி கணினிகளில் பொறுத்தப்பட்டுள்ளது. இது சைபர் தாக்குதல்களுக்கு வழிவகுக்கும் என்பதால், Windows 11 OS-க்கு மாறும் படி வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.
News September 30, 2025
BREAKING: கரூருக்கு செல்லாதது ஏன்? விளக்கம்

கரூர் துயரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சந்தித்து அரசியல் தலைவர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர். ஆனால், இதுவரை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அங்கு செல்லவில்லை. இந்நிலையில், உடல்நிலை சரியில்லாததால் கரூருக்கு செல்ல முடியவில்லை என்று அவர் விளக்கமளித்துள்ளார். மேலும், கரூர் நிகழ்வு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பிய அவர், திமுக மீது தவெகவினர் தவறான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகவும் சாடினார்.
News September 30, 2025
ஆன்லைன் புது படங்களை டவுன்லோட் பண்றீங்களா?

ஆன்லைனில் திருட்டுதனமாக வெளிவரும் படங்களை பார்ப்பது குற்றம் என்பதை விட, இதனால் நமது தனிப்பட்ட தகவல்களும் திருடுபோகும் என எச்சரிக்கப்படுகிறது. ஆம், பைரஸியில் படம் பார்க்கும் போது அல்லது டவுன்லோட் செய்ய முயலும் போது இடை இடையே பல விளம்பரங்கள் வரும். அதனை Close பண்ண முயற்சிக்க கிளிக் செய்யும் போது, தகவல்கள் ரகசியமாக திருடப்பட்டு விடுவதாக ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார்.