News October 19, 2025
Recipe: தீபாவளி லேகியம் செய்வது எப்படி?

சுக்கு, மிளகு, திப்பிலி, சதகுப்பை, சிறுநாகப்பூ, வாய்விடங்கம், கருஞ்சீரகம், சீரகம், லவங்கப்பட்டை, கோரைக் கிழங்கு, மல்லி, சித்தரத்தை, ஓமம், அதிமதுரம், கிராம்பு (தலா 50 gm) ஆகியவற்றை வறுத்து, அரைக்கவும். பின் வாணலியில் வடிக்கட்டிய வெல்லப் பாகினை ஊற்றி, கம்பி பதம் வந்தவுடன் அந்த கலவையை கொட்டி கைவிடாமல் கிளறவும். அதை இறக்கி வைத்து, சூடு ஆறிய பின் நெய் & தேன் விட்டுக் கிளறினால் தீபாவளி லேகியம் ரெடி.
Similar News
News October 20, 2025
இன்றைய நல்ல நேரம்

▶அக்டோபர் 20, ஐப்பசி 3 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 1:45 AM – 2:45 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்:10:30 AM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM▶திதி: சதுர்தசி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: தேய்பிறை
News October 20, 2025
ஸ்மிரிதி மந்தனாவுக்கு விரைவில் டும் டும் டும்

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாகவும், நட்சத்திர வீராங்கனையாகவும் கலக்குபவர் ஸ்மிரிதி மந்தனா. அவருக்கும் இந்தூரைச் சேர்ந்த இசையமைப்பாளர் பலாஷ் முச்சலும் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாம். ‘ஸ்மிரிதி மந்தனா விரைவில் இந்தூர் மருமகளாக இருக்கிறார். இவ்வளவுதான் சொல்ல முடியும். நான் உங்களுக்கு தலைப்புச் செய்தி கொடுத்துவிட்டேன்’ என பேட்டி ஒன்றில் பலாஷ் கூறியுள்ளார்.
News October 20, 2025
மாரி உலகத்தை விட்டு வெளிவர முடியவில்லை: லிங்குசாமி

மாரி செல்வராஜின் ‘பைசன்’ படத்தை பார்த்து இயக்குநர் லிங்குசாமி வெகுவாக பாராட்டியுள்ளார். ‘பைசன்’ படத்தை பார்த்துவிட்டு மாரியின் உலகத்தை விட்டு தன்னால் வெளிவர முடியவில்லை என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். துருவ் விக்ரம், பசுபதி, லால் ஆகியோரின் கதாபாத்திரங்கள் அற்புதமாக எழுதப்பட்டு இருந்ததாகவும், நிவாஸ் கே பிரசன்னாவின் இசை படத்துக்கு உயிரூட்டியுள்ளதாகவும் அவர் சிலாகித்துள்ளார்.