News October 15, 2025

Recipe: சுவையான பிரட் பாசந்தி செய்வது எப்படி?

image

வாணலியை அடுப்பில் வைத்து பாலை ஊற்றி, குங்குமப்பூ போட்டு கொதிக்க விடவும். அவ்வாறு கொதிக்கும்போது, அதில் சேரும் ஆடையை தனியே எடுத்து வைக்கவும். பால் பாதியளவு சுண்டிய பிறகு, அதில் பிரட் தூள், ஏலக்காய், பாதாம் பொடி, சர்க்கரையைச் சேர்த்துக் கிளறவும். கெட்டி பதம் வந்தவுடன், எடுத்து வைத்த பாலாடை, பால் கோவா, மில்க் மெய்ட் கலந்து கிளறி ஐஸ் சேர்த்து மேலே முந்திரி, கிஸ்மிஸ் தூவினால், பிரட் பாசந்தி ரெடி.

Similar News

News October 15, 2025

சட்டப்பேரவையில் வெடித்த கூட்டணி சர்ச்சை

image

சட்டப்பேரவையில் கரூர் துயர சம்பவம் தொடர்பாக இபிஎஸ், ஸ்டாலின் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் ஆளும் அரசு மீது இபிஎஸ் சராமரியாக குற்றஞ்சாட்டினார். அப்போது குறுக்கிட்ட ஸ்டாலின், கூட்டணிக்கு ஆள் தேடுகிறீர்கள், இதில் அரசியல் செய்ய வேண்டம் என விமர்சித்தார். உடனே இபிஎஸ், கூட்டணிக்காகவா பேசுகிறோம்; மக்கள் உயிரிழந்துள்ளனர்; அதற்காக பேசுகிறோம் என்று பதிலடி கொடுத்தார்.

News October 15, 2025

இரவோடு இரவாக உடற்கூராய்வு: CM விளக்கம்

image

கரூர் துயரில் 13 ஆண்கள், 18 பெண்கள், 10 குழந்தைகள் என 41 பேர் உயிரிழந்த விவரத்தை ஸ்டாலின் பேரவையில் தெரிவித்தார். உயிரிழந்தோரின் அனைத்து உடல்களையும் கரூர் அரசு ஹாஸ்பிடலின் பிணவறையில் வைக்க போதிய குளிர்சாதன வசதி இல்லாததால், கலெக்டரின் சிறப்பு அனுமதி பெற்று அன்று இரவே உடற்கூராய்வு செய்யப்பட்டது என்றார். செப்.28, மதியம் 1:10 மணியளவில் 39 உடல்கள் உடற்கூராய்வு செய்யப்பட்டன என்றும் தெரிவித்தார்.

News October 15, 2025

ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை தவெகவினர் தாக்கினர்: CM

image

கரூர் துயர சம்பவம் நடைபெறுவதற்கு முன்பு, எதிர்க்கட்சி தலைவர் (EPS) வேலுசாமிபுரத்தில் நடத்திய கூட்டத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என ஸ்டாலின் கூறியுள்ளார். பேரவை கூட்டத்தொடரில் கரூர் விவகாரம் பற்றி விளக்கமளித்த அவர், கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றத் தான் ஆம்புலன்ஸ் வந்ததாக தெரிவித்தார். ஆனால், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை தவெக நிர்வாகிகள் தாக்கியதாக குற்றஞ்சாட்டினார்.

error: Content is protected !!