News October 1, 2025
RECIPE: ஹெல்தியான குதிரைவாலி லட்டு!

➤குதிரைவாலி அரிசியை நெய் சேர்த்து வறுத்து, ஆற வைக்கவும் ➤நன்றாக ஆறியதும், அதை மிக்ஸியில் நைசாக அரைத்து கொள்ளவும் ➤பாத்திரத்தில் வறுத்த அரிசி மாவு, நாட்டு சர்க்கரை, ஏலக்காய் பொடி, வறுத்த முந்திரி ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக கலக்கவும் ➤கடாயில் நெய், சர்க்கரை ஆகியவற்றை பாகாக காய்ச்சி, மாவில் சேர்க்கவும் ➤ இந்த கலவையை தேவையான அளவிற்கு லட்டாக பிடித்தால், குதிரைவாலி லட்டு ரெடி. SHARE.
Similar News
News October 1, 2025
தாய்மார்கள் கண்டிப்பாக இந்த தடுப்பூசியை போடணும்!

கர்ப்பம், குழந்தை பிறப்புடன் தொடர்புடைய ஹார்மோன் மாற்றங்களுடன் HPV தொற்று ஆகியவற்றின் காரணமாக கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் ஏற்படுகிறது. இந்த பாதிப்பால், உலகில் முழுவதும் ஏற்படும் 40% உயிரிழப்புகளில், இந்தியாவில் மட்டும் 23% நிகழ்வதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது. குழந்தை பெற்ற பிறகு, பெண்கள் டாக்டர்களின் அறிவுரையின் பேரில், HPV தடுப்பூசியை போட்டுக் கொள்வது அவசியமானது. SHARE IT.
News October 1, 2025
விஜய்தான் முக்கிய காரணம்: செந்தில் பாலாஜி

போலீஸ் சொல்லியும் விஜய் கேட்காததுதான் பிரச்னைக்கு முக்கிய காரணம் என்று செந்தில் பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார். ஜெனரேட்டர் அறைக்குள் தவெகவினர் நுழைந்தபோதுதான், மின் விநியோகம் தடைபட்டது. ஜெனரேட்டர் ஆஃப் ஆனபோதும், தெருவிளக்குகள் அணையவில்லை; மின் விநியோகம் இருந்தது எனக் கூறிய அவர், கூட்டம் நடக்கும் இடத்திற்கு அருகே வந்தபோது விஜய் வாகனத்தின் உள்ளே சென்றது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
News October 1, 2025
கரூர் விவகாரத்தில் சதி உள்ளது: அதிமுக MP இன்பதுரை

கரூர் அசம்பாவிதம் தொடர்பாக காவல்துறை மீது நம்பிக்கை இல்லை என்றும், வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் அதிமுக MP இன்பதுரை தெரிவித்துள்ளார். கரூர் விவகாரத்தில் சதி உள்ளதாகவும், அரசின் தவறே மக்கள் உயிரிழக்க காரணம் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தின் சாபக்கேடு தற்போது டிஜிபியே இல்லாதது எனவும் அவர் விமர்சித்துள்ளார்.