News October 23, 2025
RECIPE: உடலை வலுவாக்கும் பாசிப்பயறு கஞ்சி!

◆முடி, தோல் வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் இந்த கஞ்சி உதவும் ➥பாசிப்பயறு, வேர்க்கடலை, கொண்டைக்கடலை, நட்ஸ் வகைகளுடன், சிறுதானியங்களை சேர்த்து சத்து மாவாக அரைத்து கொள்ளுங்கள் ➥தானியங்கள் குறைவாகவும், பயறு வகைகள் அதிகமாகவும் சேர்த்து அரைத்து கொள்ளுங்கள் ➥2 ஸ்பூன் அளவு மாவை எடுத்து, நன்கு கரைத்து உப்பு சேர்த்து, கஞ்சியாக்கி குடித்தால், உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். SHARE.
Similar News
News October 23, 2025
காசே கட்டவேணாம்; ₹7 லட்சம் இலவச காப்பீடு

ஒரு ரூபாய் பிரீமியம் கூட செலுத்தாமல் EPFO-வில் ஊழியர்கள் ₹7 லட்சம் வரை ஆயுள் காப்பீடு பெறலாம். ஊழியர் ஒருவர் இறந்தால், அவரது குடும்பம் அல்லது நாமினி, ₹2.5 லட்சம் முதல் ₹7 லட்சம் வரை காப்பீடு தொகையாக பெற முடியும். ஊழியரின் கடைசி 12 மாத சராசரி சம்பளத்தின் அடிப்படையில் காப்பீடு தொகை கணக்கிடப்படும். EPFO போர்ட்டலில் உள்ள “Death claim filing by beneficiary”-ல் இத்தொகையை பெறலாம். SHARE THIS.
News October 23, 2025
நடிகை மனோரமாவின் மகன் காலமானார்

தமிழ் திரையுலகில் மறக்க முடியாத எவர்கிரீன் நடிகையான மனோரமாவின் மகன் பூபதி(70) காலமானார். மூச்சு திணறல் பிரச்னைக்காக கடந்த வாரம் சென்னையில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பிறகு வீட்டில் ஓய்வில் இருந்த நிலையில், சற்றுமுன் அவரது உயிர் பிரிந்தது. இவர், விசுவின் ‘குடும்பம் ஒரு கதம்பம்’ படத்தில் அறிமுகமாகி பல படங்கள், சீரியல்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார்.
News October 23, 2025
BREAKING: 14 மாவட்டங்களில் இன்று கனமழை

கோவை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. அதேபோல், நாளை(அக்.24) கோவை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.