News July 26, 2024
சமீபத்தில் உயர்த்தப்பட்ட FD வட்டி வகிதம்

சில வங்கிகள் வைப்புத்தொகைக்கான வட்டியை உயர்த்தியுள்ளன. அதன்படி, HDFC வங்கி 4 ஆண்டுகள் 7 மாதங்கள் – 55 மாதங்களுக்கு 7.40%, ICICI வங்கி 15 மாதங்கள் – 18 மாதங்களுக்கு 7.20%, SBI வங்கி 444 நாள்களுக்கு 7.25%, PNB வங்கி 400 நாள்களுக்கு 7.25%, Axis வங்கி 17-18 மாதங்களுக்கு 7.20% வட்டி வழங்குகின்றன. இந்த திட்டங்களில் மூத்த குடிமக்களுக்கு 0.50% கூடுதல் வட்டி கிடைக்கும்.
Similar News
News December 2, 2025
பெயரை மாற்றியதால் குணம் மாறிவிடாது: பெ.சண்முகம்

ராஜ்பவன், ‘மக்கள் பவன்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இது பற்றி பேசிய சிபிஎம் பெ.சண்முகம், ‘கொடிய விஷமுள்ள பாம்புக்கு கூட நல்ல பாம்பு என்று தான் பெயர். நல்ல பாம்பு என்று சொல்வதால் அதற்கு விஷமில்லை என்று அர்த்தம் இல்லை’ என்று தெரிவித்துள்ளார். ராஜ் பவனை, மக்கள் பவன் என மாற்றியதால் அவர்கள் குணம் மாறிவிட்டது என்ற முடிவுக்கு வர முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News December 2, 2025
சாகும் வரை உண்ணாவிரதம்.. பிரபல தமிழ் நடிகர் அறிவிப்பு

SIR மூலம் வெளி மாநிலத்தவர்களுக்கு தமிழகத்தில் வாக்குரிமை அளிக்க கூடாது என மன்சூர் அலிகான் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தின் உரிமைகளை ECI படுகுழியில் தள்ளுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்நிலையில், ECI & மத்திய அரசை கண்டித்து நாளை (டிச.3) காலை 8 மணி முதல் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார். சமீபத்தில் திமுகவுக்காக வாக்கு சேகரிப்பேன் என மன்சூர் கூறியிருந்தார்.
News December 2, 2025
பாமகவை மீட்க குழு அமைத்தார் ராமதாஸ்

அன்புமணிதான் பாமகவின் தலைவர் என்று ECI கூறிவிட்டது. இந்நிலையில், அன்புமணி வசம் சென்ற பாமகவை மீட்பதற்காக ஜி.கே.மணி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். நீதிமன்றங்களில் சட்ட போராட்டங்களை நடத்தும் பணியை இக்குழு மேற்கொள்ளும் எனக் கூறிய ராமதாஸ், கட்சித் தொண்டர்கள் சோர்வடைய வேண்டாம்; கட்சி மற்றும் தேர்தல் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.


