News October 4, 2024

சற்றுமுன்: முன்னாள் MLA காலமானார்

image

முன்னாள் MLA ஓ.ஆர்.ராமச்சந்திரன் (68) இன்று காலமானார். காங்கிரஸில் இருந்தபோது 3 முறை (1991, 1996, 2001) கம்பம் தொகுதியின் எம்எல்ஏவாக பதவி வகித்த அவர், அக்கட்சியில் இருந்து விலகி, தமிழ் மாநில காங்கிரஸில் இணைந்தார். பல்வேறு பொறுப்புகளில் இருந்த அவர், கம்பத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில், இன்று மதியம் காலமானார். அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Similar News

News August 14, 2025

மக்களின் தியாகத்தை போற்றுவோம்: PM மோடி

image

பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்து 1947 ஆக.14-ல் பாகிஸ்தான் பிரிக்கப்பட்டது. அப்போது நிகழ்ந்த வன்முறை, வெறுப்பு, துன்புறுத்தல்கள் காரணமாக பலர் உயிரிழந்தனர். அவர்களின் தியாகத்தை போற்றி இந்நாள் பிரிவினை கொடுமையின் நினைவு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில், மக்களின் போராட்டங்கள், தியாகங்களை நினைவுகூர்ந்து, தேச ஒற்றுமை, சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்துவோம் என PM மோடி தெரிவித்துள்ளார்.

News August 14, 2025

கடும் விளைவுகள் ஏற்படும்: புடினுக்கு டிரம்ப் எச்சரிக்கை

image

போர் நிறுத்தத்துக்கு சம்மதிக்கவில்லை என்றால் விளைவுகள் மிக கடுமையாக இருக்கும் என புடினுக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் மற்றும் ஜெலன்ஸ்கியுடன் காணொளி வாயிலாக டிரம்ப் நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர் ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். புடினை விரைவில் டிரம்ப் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த உள்ளது கவனிக்கத்தக்கது.

News August 14, 2025

மீண்டும் அதிமுகவில் இணைகிறார் நட்ராஜ்

image

மயிலாப்பூர் முன்னாள் MLA நட்ராஜ், மீண்டும் அதிமுகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின், கட்சி பணியாற்றாமல் ஒதுங்கி இருந்தார். இந்த நிலையில், தலைமைக்கு விசுவாசமாகவும், தலைமை முடிவுகளுக்கு கட்டுப்பட்டு நடப்பேன் என்றும் இபிஎஸ்ஸிடம் கடிதம் கொடுத்துள்ளார். மேலும், 2026-ல் அதிமுகவை ஆட்சியில் அமர வைக்க பாடுபடுவேன் என்று உறுதியளித்துள்ளார்.

error: Content is protected !!