News December 8, 2024
சிரியா தலைநகரை நெருங்கிய கிளர்ச்சியாளர்கள் படை

சிரியா தலைநகர் டமாஸ்கசை கிளர்ச்சியாளர்கள் படை நெருங்கி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 2 மாகாணங்களை நேற்று பிடித்த துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்கள் படை, நாட்டின் மிகப்பெரிய மாகாணமான ஹோம்சுக்குள்ளும் நுழைந்து விட்டது. இப்பகுதி தலைநகர் டமாஸ்கசில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனால் எந்நேரமும் டமாஸ்கசையும் அவர்கள் கைப்பற்றலாம் எனக் கூறப்படுவதால் சிரியாவில் பதற்றம் நிலவுகிறது.
Similar News
News August 29, 2025
தீயணைப்பு ஆணையத் தலைவர் சங்கர் ஜிவால்

இன்றுடன் ஓய்வு பெறவுள்ள தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு தமிழக அரசு புதிய பொறுப்பு வழங்கியுள்ளது. தீயணைப்பு ஆணையத் தலைவராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் 30 முதல் சட்ட ஒழுங்கு டிஜிபி ஆக பதவி வகித்து வந்தார். இன்று எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் வழியனுப்பு விழா நடைபெறவுள்ளது. தமிழகத்தின் புதிய டிஜிபி குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
News August 29, 2025
₹1,000 மகளிர் உரிமைத் தொகை.. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களின் பெறப்பட்ட மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார். விடுபட்டு போன தகுதியான மகளிர் அனைவருக்கும் வீடு தேடி மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார். திட்டத்தில் ₹1,000 பெற தகுதியுள்ள மகளிரின் முதற்கட்ட பட்டியல் விரைவில் வெளியிட இருப்பதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
News August 29, 2025
மக்களின் வலியை புரிந்து கொள்ளுமா திமுக? EPS

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் மக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் வைகை ஆற்றில் வீசப்பட்டதற்கு EPS கண்டனம் தெரிவித்துள்ளார். உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரில் திமுக அரசு விளம்பரத்திற்காக ஆரம்பித்த திட்டத்தின் மனுக்கள், அஸ்தியை கரைப்பது போல, வைகையாற்றில் குப்பைபோல் போடப்பட்டுள்ளது. மக்களின் வலி, உணர்வு, வேதனைகளை புரிந்துக் கொள்ளாமல் நாடகமாடும் திமுகவிற்கு 2026-ல் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என தெரிவித்தார்.