News April 5, 2025
ஏசி தீப்பிடிக்க காரணங்கள்

*கண்டென்சர் காயிலில் தூசிகள் அதிகம் சேர்வதால், வெப்பம் வெளியேற முடியாமல் அளவுக்கதிகமாக சூடாகிறது *மட்டமான வயரிங், ப்ளக் பயன்பாடு, பழைய வயர்கள் பயன்படுத்துவது *வோல்டேஜ் ஏற்ற இறக்கம் *ஏசிக்கு உரிய கேஸ் வகைகளை பயன்படுத்தாமல், தவறான கேஸ் பயன்படுத்துவது. இந்த தவறுகளை முற்றிலும் தவிர்த்தால், ஏசி தீப்பிடிக்கும் விபத்துகளையும் தடுக்கலாம்.
Similar News
News January 16, 2026
BREAKING: தவெகவில் புதிய குழுவை அமைத்தார் விஜய்

சட்டப் பேரவைத் தேர்தலுக்கான பிரசார பணிகளை மேற்கொள்ள தவெகவில் 10 பேர் கொண்ட குழுவை அமைத்து விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். புஸ்ஸி ஆனந்த் தலைமையிலான அந்தக் குழுவில் ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், பார்த்திபன், ராஜ்குமார், விஜய் தாமு, செல்வம், பிச்சைரத்தினம் கரிகாலன், செரவு மைதின், கேத்ரின் பாண்டியன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இக்குழுவானது 234 தொகுதிகளிலும் பிரசார கூட்டங்களை திட்டமிடவுள்ளது.
News January 16, 2026
SLUM DOG.. 33 TEMPLE ROAD-ல் விஜய் சேதுபதி!

மசாலா படங்கள் இயக்குவதில் புகழ்பெற்ற புரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ‘Slum dog, 33 Temple Road’ என பெயரிடப்பட்டுள்ளது. விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள இந்த போஸ்டரில், ரத்தம் சொட்டும் கத்தியை பிடித்த கையோடு முறைத்தபடி நிற்கிறார். பான் இந்திய படமாக உருவாகும் இந்த படத்தில் சம்யுக்தா மேனன், தபு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
News January 16, 2026
ஒன்றுபட்ட இந்து சக்தி வென்று தீரும்: எச்.ராஜா

பாஜகவின் கடும் போராட்டத்திற்கு பிறகு, திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தலவிருட்சமான கல்லத்தி மரத்தில் பிறை கொடியை போலீசார் அகற்றியுள்ளனர். இந்நிலையில், இது பாஜக நடத்திய போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. ‘ஒன்றுபட்ட இந்து சக்தி வென்று தீரும்’ என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு எனக்கூறிய எச்.ராஜா,, பாஜகவுடன் இணைந்து போராட்டம் நடத்திய தாய்மார்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.


