News April 26, 2025
CSK போட்டியை பார்க்க ரெடியா?

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 30-ம் தேதி CSK, PBKS அணிகள் மோதவுள்ளன. அதற்கான டிக்கெட் விற்பனை, நாளை (27.04.2025) காலை 10.15 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் போட்டிக்கு அடியும் பிடியுமாக நடந்த டிக்கெட் விற்பனை, CSK-வின் தொடர் தோல்வியால் மந்தமடைந்துள்ளது. இதனால், நாளைய டிக்கெட் விற்பனையில் ரசிகர்கள் ஆர்வம் காட்டுவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
Similar News
News December 14, 2025
மத்திய அமைச்சருக்கு ISI அமைப்பால் ஆபத்து

மத்திய வேளாண் அமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌகானுக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ISI-யால் அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து அவருக்கான பாதுகாப்பை உள்துறை அமைச்சகம் தீவிரப்படுத்தியுள்ளது. ISI அமைப்பு மத்திய அமைச்சர் குறித்த முக்கிய தகவல்களை திரட்டியதால் உளவுத்துறை உஷாராகியுள்ளது.. அவருக்கு ஏற்கெனவே Z+ பாதுகாப்பு இருந்தும், கூடுதல் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
News December 14, 2025
ஆபிரகாம் லிங்கனின் பொன்மொழிகள்

*எதிர்காலத்தைக் கணிப்பதற்கான மிகவும் நம்பகமான வழி, அதை உருவாக்குவதுதான். *எதிர்ப்பது உங்கள் கடமையாக இருக்கும்போது, அமைதியாக இருப்பது பாவச்செயலாகும்.*ஒரு வாக்குச்சீட்டு தோட்டாவை விட வலிமையானது. *ஒரு மரத்தை வெட்டுவதற்கு ஆறு மணிநேரம் அவகாசம் கொடுங்கள், நான் முதல் நான்கு மணிநேரம் கோடரியைக் கூர்மைப்படுத்துவேன். *மேகத்தின் பின்னால் இருந்தாலும், சூரியன் இன்னும் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.
News December 14, 2025
பாஜகவுக்கு வாழ்த்து கூறிய சசி தரூர்

கேரள உள்ளாட்சி தேர்தலில் காங்.,கின் வெற்றி உண்மையிலேயே பாராட்டக்கூடிய ஒன்று என சசி தரூர் கூறியுள்ளார். அதேநேரம், திருவனந்தபுரத்தில் பாஜக வெற்றி பெற்றதற்கும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். முன்னதாக, முன்னதாக, ராகுல் காந்தி தலைமையிலான காங்., எம்பிகள் கூட்டத்தை <<18549139>>சசி தரூர்<<>> புறக்கணித்தது பேசுபொருளானது. அத்துடன், அவர் PM மோடியை அவ்வப்போது புகழ்வது கவனிக்கத்தக்கது.


