News August 14, 2025

அஜித் உடன் இணையத் தயார்: லோகேஷ்

image

புதுமுகங்கள் மூலம் அறிமுகமான லோகேஷ், கைதி திரைக்கதை மூலம் டாப் ஹீரோக்களை திரும்பி பார்க்க வைத்தார். அடுத்தடுத்து விஜய், கமல், ரஜினி ஆகிய முன்னணி நடிகர்களுடன் இணைந்தும் ஹிட் கொடுத்துள்ளார். இந்த வரிசையில் அஜித்துடன் அவர் இணைய வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்நிலையில், எப்போது அதற்கு வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போது படம் பண்ணுவேன் என்று லோகேஷ் கூறியுள்ளார். தெறிக்கவிடலாமா!

Similar News

News August 14, 2025

தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு துரோகம்: காங்கிரஸ் சாடல்

image

தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய செமிகண்டக்டர் ஆலை குஜராத்திற்கு மாற்றப்பட்டதாக ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார். அதேபோல், தெலங்கானாவிற்கு வர இருந்த ஆலையை, ஆந்திராவிற்கு இடம்பெயர வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் விமர்சித்துள்ளார். ஏற்கனவே தெலங்கானாவில் இருந்து குஜராத்துக்கு ஒரு தொழிற்சாலை சென்றதாக குறிப்பிட்ட அவர், பாஜக அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவதாகவும் சாடினார்.

News August 14, 2025

₹3,000 டோல்கேட் FAStag பாஸ் நாளை அமலுக்கு வருகிறது

image

நாடு முழுவதும் ஆண்டுக்கு ₹3,000 செலுத்தி பயணம் செய்யும் FAStag திட்டம் நாளை அமலுக்கு வருகிறது. இதன் மூலம் வணிக நோக்கமற்ற கார், ஜீப், வேன்கள் நாடு முழுவதும் 200 முறை டோல்கேட்களில் கட்டணமின்றி செய்ய முடியும். <>Rajmarg Yatra<<>> செயலியில் PASS வழங்கும் பணி தொடங்கியுள்ளது. பொதுமக்கள் தங்களது செல்போன் எண், வாகன பதிவு எண், பாஸ்டேக் ஐடி உள்ளிட்டவற்றை பதிவு செய்து ரசீதை பெற்றுக் கொள்ளலாம். SHARE IT.

News August 14, 2025

மீண்டும் EPS-ஐ தாக்க தொடங்கிய OPS

image

இழிவான நடத்தை கொண்டவர் EPS என OPS சாடியுள்ளார். மேலும், தலைமை பண்பிற்கான அறிகுறி துளியும் இல்லாத EPS-யிடம் ADMK சிக்குண்டு கிடப்பதால் தொடர் தோல்விகளை சந்தித்து வருவதாகவும், செல்லூர் ராஜு, தம்பிதுரை என ADMK மீண்டும் ஒன்றிணைய நினைக்கும் மூத்தத் தலைவர்களை குறிவைத்து அவர் அவமதிப்பு செய்து வருவதாகவும் கடுமையாக விமர்சித்துள்ளார். நீண்ட காலம் அமைதி காத்த OPS மீண்டும் EPS-யை தாக்க தொடங்கியுள்ளார்.

error: Content is protected !!