News August 26, 2025
RCB அணிக்கு திரும்ப ரெடி : ABD சூசகம்

RCB அணியின் முன்னாள் லெஜண்டரி வீரர் ஏபி டிவில்லியர்ஸ். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், எதிர்காலத்தில் தன்னை RCB அணியின் பயிற்சியாளர் அல்லது ஆலோசகர் பணிக்கு அணுகினால் அதனை ஏற்றுக்கொள்வேன் என தெரிவித்துள்ளார். தனது இதயம் எப்போதும் RCB அணியோடு இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இப்பேட்டியின் மூலம் வரும் IPL-ல் RCB அணியில் ABD ஏதாவதொரு பொறுப்பு வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News August 26, 2025
திமுக முன்னாள் MLA காலமானார்

அரவக்குறிச்சி தொகுதியின் முன்னாள் MLA கலிலூர் ரஹ்மான் (78), வயது முதிர்வால் காலமானார். திமுகவில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருந்த அவர், 2006-ம் ஆண்டு திமுக சார்பில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இஸ்லாமியர்களின் அடையாளமாக இருந்த அவர், 2 முறை தேர்வு நிலை பேரூராட்சி தலைவராகவும் இருந்துள்ளார். அவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News August 26, 2025
ரூட் 2012-ம் ஆண்டே என்னை கவர்ந்துவிட்டார்: சச்சின்

டெஸ்ட்டில் அதிக ரன்கள் அடித்தவர்களில் சச்சின் (15921) முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் ரூட் (13543) உள்ளார். இந்நிலையில் ரூட் திறமை குறித்து ரெடிட் தளத்தில் சச்சின் பகிர்ந்துள்ளார். அதில், கடந்த 2012-ல் நாக்பூர் டெஸ்ட்டில் அவர் விளையாடிய விதமும், விக்கெட்டை மதிப்பிடும் முறையும் தன்னை கவர்ந்ததாகவும், இங்கி., கேப்டனாக இவர் வருவார் என சகவீரர்களிடம் தான் தெரிவித்ததாகவும் கூறினார்.
News August 26, 2025
சிரஞ்சீவி அரசியலில் வீழ்ந்த கதை!

சிரஞ்சீவி நிலைதான் <<17519703>>விஜய்க்கும் <<>>என எதிர்க்கட்சியினர் ஆருடம் சொல்கின்றனர். சிரஞ்சீவிக்கு என்ன ஆனது? *1992 முதல் திட்டமிட்டு 2008-ல் சிரஞ்சீவி ’பிரஜா ராஜ்யம்’ கட்சியை தொடங்கினார் * 2009 தேர்தலில் சிரஞ்சீவி (திருப்பதி) உள்பட 18 பேர் மட்டுமே வென்றனர் * YSR மறைவுக்கு பிறகு 2011-ல் கட்சியை காங்கிரஸுடன் இணைத்து மத்திய இணையமைச்சர் ஆனார் * 2014 ஆந்திர பிரிவினைக்கு பிறகு அரசியலில் இருந்து ஒதுங்கினார்.