News August 6, 2024

ஈரானின் தாக்குதலை சந்திக்க தயார்: நெதன்யாகு

image

ஈரானில் ஹமாஸ் & ஹிஸ்புல்லா தலைவர்கள் படுகொலைகளுக்கு இஸ்ரேலின் மொஸாட் அமைப்புதான் காரணம் என கூறப்படுகிறது. இந்நிலையில் இஸ்ரேல் மீது போர் தொடுக்க ஈரான் & அதன் ஆதரவு நாடுகள் ஆயத்தமாகி வருகின்றன. நாளுக்கு நாள் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, தீய சக்தியான ஈரானின் எத்தகைய தாக்குதலையும் சந்திக்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்.

Similar News

News January 14, 2026

PM மோடி தமிழர்களுக்கு தரும் மரியாதை: எல்.முருகன்

image

டெல்லியில் இன்று நடைபெறும் பொங்கல் விழாவில் PM மோடி நேரில் வந்து பங்கேற்பது, அவர் தமிழர்களுக்கு அளிக்கும் மரியாதை என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். தமிழர்களின் பண்பாடு, கலாசாரம், தமிழ் மொழியின் மீது PM மோடி அதிகமான பிரியத்தை வைத்துள்ளதாகவும், அதனால் தான் காசி தமிழ் சங்கமம் நான்காவது ஆண்டாக நடப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

News January 14, 2026

உலகமெங்கும் கால்பதிக்க தயாராகும் UPI!

image

இந்தியாவின் உள்நாட்டு டிஜிட்டல் பரிவர்த்தனை தளமான UPI-ஐ, பிற நாடுகளுக்கும் விரிவுபடுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நிதி சேவைகள் செயலாளர் நாகராஜு தெரிவித்துள்ளார். இதன்மூலம் வெளிநாடு செல்லும் இந்தியர்கள் சிரமமின்றி டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார். பூடான், சிங்கப்பூர், கத்தார், பிரான்ஸ் உள்ளிட்ட 8 நாடுகளில் தற்போது UPI வசதி செயல்பாட்டில் உள்ளது.

News January 14, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: கண்ணோட்டம் ▶குறள் எண்: 580 ▶குறள்: பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர். ▶பொருள்: கருணை உள்ளமும் பண்பாடும் உள்ளவர்கள், தம்முடன் பழகியவர்கள் நஞ்சு கொடுத்தாலும் அதை அருந்திக் களிப்படைவார்கள்.

error: Content is protected !!