News March 25, 2025
காதலிக்க ரெடி: பாண்டியாவின் முன்னாள் மனைவி

வாழ்க்கை மீண்டும் ஒரு காதல், ரிலேஷன்ஷிப் வாய்ப்பைக் கொடுத்தால், அதை ஏற்க தயாராக இருப்பதாக நடாஷா ஸ்டான்கோவிக் தெரிவித்துள்ளார். சரியான நேரம் வரும் போதுதான் இருவருக்குள்ளான உறவு மலரும் எனவும், வாழ்க்கை கொண்டு வருபவற்றை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். செர்பியன் மாடலான நடாஷா, ஹர்திக் பாண்டியாவை கடந்த 2020ல் திருமணம் செய்த நிலையில், 2024ல் இருவரும் பிரிந்தனர்.
Similar News
News December 3, 2025
ராசி பலன்கள் (03.12.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News December 2, 2025
கார்த்திகை தீபத்தை கலவர தீபமாக மாற்றும் பாஜக: CPIM

ரவிக்குமார் என்பவர் தொடுத்த வழக்கில், இந்தாண்டு முதல் திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என்று மதுரை HC அமர்வு தீர்ப்பளித்தது. இந்த இடம் சிக்கந்தர் மலைக்கு மிக அருகில் உள்ளது என்றும், கார்த்திகை தீபத்தை கலவர தீபமாக மாற்றும் BJP-ன் முயற்சி எனவும் பெ.சண்முகம் குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழக அரசு இத்தீர்ப்பை எதிர்த்து வழக்கு தொடரவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
News December 2, 2025
இம்ரான் உயிருடன் இருப்பதை உறுதி செய்த சகோதரி

சிறையில் உள்ள பாகிஸ்தான் Ex. PM இம்ரான்கான் கொல்லப்பட்டதாக சந்தேகித்து அந்நாட்டில் போராட்டம் வெடித்தது. இந்நிலையில், இம்ரான்கானை அவரது சகோதரி உஸ்மா நேரில் சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனையடுத்து அவரை இன்று சந்தித்து 20 நிமிடங்கள் உஸ்மா பேசினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இம்ரான் உயிருடன் இருக்கிறார், ஆனால் மனதளவில் பெரும் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.


