News August 26, 2024
பாஜகவுக்கு பாடம் புகட்ட கூட்டணி சேர தயார்: முஃப்தி

காஷ்மீரில் காங்கிரஸ் – JKNC கூட்டணிக்கு ஆதரவளிக்க தயாராக உள்ளதாக PDP தலைவரும் முன்னாள் முதல்வருமான மெகபூபா முஃப்தி அறிவித்துள்ளார். காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண்பதே தனக்கு மிக முக்கியம் என்றும் சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்த பாஜகவுக்கு பாடம் புகட்டவும், மண்ணின் மக்களின் கண்ணியத்தை காக்கவும் PDPஇன் திட்டங்களை ஏற்றால், அவர்களுடன் இணைந்து நிற்க தயார் எனத் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 16, 2025
காஞ்சிபுரம்: கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட வெள்ளக்குளம் சுடுகாடு அருகே அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக சிவகாஞ்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சோதனை செய்ததில், ஏகாம்பரநாதர் வடக்கு மாடவீதி பகுதியை சேர்ந்த சரவணன் என்பவரை சிவகாஞ்சி போலீசார் இன்று (டிச.16) கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
News December 16, 2025
ரேஷன் கடைகளில் இலவச நாப்கின் கிடையாது: TN அரசு

ரேஷன் கடைகளில் இலவசமாகவோ, மானிய விலையிலோ நாப்கின்கள் வழங்க உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையின்போது, இதனை செயல்படுத்த ₹4,000 கோடி செலவாகும் என்பதால், நாப்கின் வழங்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், கிராமப்புற பெண்களுக்கு இலவசமாக நாப்கின் வழங்கப்பட்டு வருவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
News December 16, 2025
டிராகன் பழத்தின் நன்மைகள்

டிராகன் பழம் விநோதமாக தெரிந்தாலும், இதில் பல நன்மைகள் உள்ளன. பழத்தில் உள்ள வைட்டமின் சி, நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆகியவை உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. டிராகன் பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் என்று மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.


