News February 14, 2025

2036இல் ஒலிம்பிக் போட்டியை நடத்த தயார்: அமித் ஷா

image

2036இல் ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தியா தயாராக உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அசாமில் தேசிய விளையாட்டு போட்டி நிறைவு விழாவில் பேசிய அவர், விளையாட்டில் இந்தியாவுக்கு மிகவும் பிரகாசமான எதிர்காலம் உள்ளது என்றார். ஒலிம்பிக் போட்டி இந்தியாவில் நடைபெறும்போது, நமது வீரர்கள் பதக்கங்களை வென்று, இந்திய கொடியை உயரத்தில் பறக்கச் செய்வார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Similar News

News September 11, 2025

டிரெண்டாகும் புதிய வகை ❤️காதல்❤️ இனி ‘No Pain’

image

Situationship, Flirtationship போன்றவற்றுக்கே அர்த்தம் புரியாத நிலையில், ‘Date them till you hate them’ என்ற புது டிரெண்ட் வந்துவிட்டது. பார்ட்னருடன் பிரச்னை ஏற்பட்டு, அது பொறுத்துக்கொள்ள முடியாத கட்டத்திற்கு போனால், சண்டை- சச்சரவு என டிராமா இல்லாமல் அமைதியாக கழண்டு கொள்ளலாமாம். இந்த பிரேக் அப் அவ்வளவு வலிக்காது என்றும், ‘அப்பாடா தப்பிச்சோம்’ என்ற உணர்வுதான் இருக்கும் எனவும் கூறுகின்றனர்.

News September 11, 2025

பொறுப்பு DGP-க்கு எதிரான மனு தள்ளுபடி

image

தமிழக பொறுப்பு DGP-யாக ஜி.வெங்கடராமன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை HC-ல் வழக்கு தொடரப்பட்டது. இதே விவகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில்(SC) தாக்கலான வழக்கில், மாநில அரசு அனுப்பிய டிஜிபி பரிந்துரை பட்டியலை விரைந்து பரிசீலிக்க வேண்டும் என UPSC-க்கு ஆணையிடப்பட்டது. இந்நிலையில், இதை சுட்டிக்காட்டி நாங்கள் தலையிட விரும்பவில்லை என கூறி ஐகோர்ட் வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.

News September 11, 2025

தங்கம் விலை உயரும்போது இதை செய்யலாமா?

image

இந்த ஆண்டு மட்டும் தங்கம் விலை 35%-க்கும் மேல் உயர்ந்துள்ளது. விலை அதிகரிப்பு, பண்டிகை காலம் தொடக்கம், GST திருத்தம் போன்றவற்றால், நகை மீதான முதலீடு கவனம் பெறுகிறது. தங்க நகை கடை நிறுவனங்களின் எதிர்கால வளர்ச்சி, உத்திகள் மற்றும் நுகர்வோர் உணர்வைப் பொறுத்து மாறும். இதனால், திடமான அடிப்படை கூறுகள், சந்தை போக்குகளை அடிப்படையாக கொண்டு நகை பங்குகளில் முதலீடு செய்யலாம் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

error: Content is protected !!