News December 13, 2024
உயிரை கொடுக்கவும் தயார்: மோடிக்கு விவசாயி கடிதம்

பஞ்சாப் விவசாய சங்கத் தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால் நடத்தும் உண்ணாவிரத போராட்டம், 17வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில், அவர் PM மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், விவசாயிகளின் நலனுக்காக என்னுடைய உயிரையும் தியாகம் செய்ய தயாராக உள்ளேன். அப்போதாவது மத்திய அரசு விழித்துக் கொண்டு எங்களின் 13 கோரிக்கைளை நிறைவேற்றுமா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். விவசாயிக்கு அரசின் பதில் என்னவாக இருக்கும்?
Similar News
News March 15, 2026
அறிவித்தார் திருப்பூர் கலெக்டர்

திருப்பூர் மாவட்டத்தில் எரிவாயு சிலிண்டர்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய, மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. சிலிண்டர் விநியோகத்தில் தட்டுப்பாடு அல்லது தாமதம் ஏற்பட்டால், பொதுமக்கள் 0421-2218455 என்ற தொலைபேசி எண்ணிற்குத் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மனிஷ் தெரிவித்துள்ளார்.
News March 15, 2026
தினமும் காலையில் கருவேப்பிலை சாப்பிடுங்க

▶கருவேப்பிலையில் பாஸ்பரஸ், கால்சியம், இரும்பு, தாமிரம், வைட்டமின்கள், மெக்னீசியம் சத்துக்கள் உள்ளன. ▶கண்புரை நோய் வராமல் தடுத்து, பார்வையை மேம்படுத்த உதவும். ▶இன்சுலின் உற்பத்தி ஆக உதவுவதோடு, நீரிழிவு நோயை எதிர்த்துப் போராடவும் உதவும். ▶மலச்சிக்கல், அமிலத்தன்மை, வாய்வு உள்ளிட்ட வயிற்றுப் பிரச்னைகளில் இருந்தும் நிவாரணம் அளிக்கும். ▶குறிப்பாக, தொப்பையை குறைக்க உதவும் என டாக்டர் கூறுகின்றனர்,
News March 15, 2026
விஜய்யிடம் மறைமுகமாக கூட்டணி பேச்சுவார்த்தையா?

விஜய்யிடம் பாஜக மறைமுகமாக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தொடர்ந்து செய்திகள் வருகின்றன. இதுதொடர்பாக நயினார் நாகேந்திரனிடம் கேட்டபோது, பத்திரிகையாளர்களுக்கு தெரிந்த தகவல் கூட தனக்கு தெரியாது என கூறினார். மேலும், விஜய்யின் டெல்லி பயணத்தையும் கூட்டணியையும் முடிச்சுப் போடுவது எந்த வகையிலும் நியாயமில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.


