News April 26, 2025
வெளிப்படையான விசாரணைக்கு தயார்: பாக். PM

பஹல்காம் தாக்குதல் குறித்து வெளிப்படையான, நடுநிலையான, நம்பகத்தன்மை வாய்ந்த விசாரணைக்கு தயார் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அனைத்து வகையிலான தீவிரவாதத்திற்கும் எதிராகவே உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேபோல் சிந்து நதிநீரை நிறுத்தினால் கடும் பதிலடி கொடுக்கப்படும் எனவும் பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 26, 2025
பாகிஸ்தானியர்கள் விசா காலக்கெடு

பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களின் விசா காலக்கெடு குறித்து முக்கிய உத்தரவு வெளியாகியுள்ளது. SAARC விசா உள்ளவர்கள் இன்று (ஏப்.26) நள்ளிரவுக்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும். வணிக, பத்திரிகையாளர், மாணவர் உள்ளிட்ட விசா உள்ளவர்கள் நாளைக்குள்ளும், மருத்துவ விசா உள்ளவர்கள் வருகிற 29-க்குள் வெளியேற வேண்டும். இனி எந்த புதிய விசாவும் பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்படாது.
News April 26, 2025
கோவையில் புயல்: ஆதவ்

மக்கள் ஆட்சியை கொண்டுவர ஒரு ஜனநாயகன் தேவைப்படுகிறான்; அதற்காக ஒரு புயல் இன்று கோவையை நெருங்கியுள்ளது என்று விஜய்யை சுட்டிக்காட்டி ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளார். தமிழகத்தில் அரசியல் மாற்றம் இளைஞர்களால் உருவானது. தற்போது விஜய் செல்லும் இடமெல்லாம் இளைஞர்கள் தொடருகிறார்கள் என்பதால் 2026-இல் தவெக ஆட்சியைப் பிடிக்கும். அதற்கு இளம்பெண்கள் படை உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்தார்.
News April 26, 2025
வருமா ‘வா வாத்தியார்’ ?

கார்த்தியின் ‘வா வாத்தியார்’ படம் எப்போது வெளிவரும் என்பது குறித்த எந்த தகவலும் இல்லை. இன்னும் சில நாள் கார்த்தியின் கால்ஷீட் வேண்டும் என இயக்குநர் நலன் குமாரசாமி கேட்கிறாராம். ஆனால், சர்தார் 2-ல் பிஸியாக இருக்கும் கார்த்தி, இப்போது கால்ஷீட் தர முடியாது என அடம் பிடிக்கிறாராம். இருவரும் மாறி மாறி இழுத்தடிப்பதால், படம் எப்போது வெளிவரும் என்ற அறிகுறியே இல்லாமல் இருக்கிறது.