News May 27, 2024
அதிமுக தலைவர்களோடு விவாதத்திற்கு தயார்

ஜெயலலிதா தீவிரமான இந்துத்துவா தலைவர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஜெயலலிதா இந்துத்துவ தலைவர் இல்லை என்று அதிமுகவினர் கருதினால், நேரடியாக தன்னிடம் விவாதத்துக்கு வரலாம் என அவர் அழைப்பு விடுத்துள்ளார். ஜெயலலிதாவை இந்துத்துவா தலைவர் என்று அவர் ஏற்கெனவே கூறியதற்கு, அதிமுக தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது அவர்களை விவாதத்திற்கு அழைத்துள்ளார்.
Similar News
News September 17, 2025
கதை ரெடினா கமலுடன் ஷூட்டிங் போலாம்: ரஜினி

கமல், ரஜினி இணையும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் அந்த படத்தின் அப்டேட்டை ரஜினியே கொடுத்துள்ளார். இருவரும் இணைந்து நடிக்க ஆசையாக உள்ளதாக கூறிய அவர், இன்னும் சரியான இயக்குநர் அமையவில்லை என கூறினார். நல்ல கதை மற்றும் கதாபாத்திரங்கள் அமைந்தால் விரைவில் ஷூட் போகலாம் எனவும் தெரிவித்தார்.
News September 17, 2025
சற்றுமுன்: ஒரே நாளில் விலை ₹2000 குறைந்தது

ஆபரணத் தங்கம் விலை சற்று குறைந்த நிலையில், வெள்ளி விலையும் குறைந்துள்ளது. நேற்று புதிய உச்சத்தை எட்டிய வெள்ளி விலை, இன்று கிராமுக்கு ₹2 குறைந்து ₹142-க்கும், கிலோ வெள்ளி ₹2000 குறைந்து ₹1,42,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இது நகைப்பிரியர்களுக்கு சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், வரும் நாள்களிலும் மேலும் விலை குறையுமா என்று எதிர்பார்க்கின்றனர்.
News September 17, 2025
RECIPE: ஹெல்தியான சிறுதானிய பனியாரம்!

குதிரைவாலி, சாமை, இட்லி அரிசி & உளுந்து ஆகியவற்றை 6 மணி நேரம் ஊற வைத்து, இட்லி மாவு பதத்துக்கு அரைக்கவும். கடலைப்பருப்பை பொன்னிறமாக வறுத்து, அதை மாவில் சேர்க்கவும். இத்துடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி & உப்பு சேர்க்கவும். இந்த மாவை மிதமான தீயில் சுட்டு எடுத்தால், ஹெல்தியான குதிரைவாலி- சாமை பனியாரம் ரெடி. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். SHARE.