News April 24, 2024

“புத்தகங்களை வாசித்து, பிறருக்குப் பரிசளியுங்கள்”

image

உலகப் புத்தக நாளான இன்று புத்தகங்களை வாசியுங்கள், பிறருக்குப் பரிசளித்து ஊக்கப்படுத்துங்கள் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அவர் X பதிவில், புதிய உலகத்திற்கான திறவுகோல், கல்வியின் அடித்தளம், சிந்தனையின் தூண்டுகோல் என மனித சமுதாயத்தை தழைக்கச் செய்வதில் புத்தகத்தின் பங்கு அளப்பரியது. கையில் புத்தகங்கள் தவழட்டும்! சிந்தனைகள் பெருகட்டும்! நல்வழி பிறக்கட்டும்! எனத் தெரிவித்துள்ளார்.

Similar News

News January 5, 2026

Fridge-ல் மறந்தும் இவற்றை வெச்சுராதீங்க..

image

பொதுவாக காய்கறிகள், சமைத்த பொருள்களை Fridge-ல் வைத்து பயன்படுத்துவோம். எதை வைக்கலாம், எதை வைக்கக்கூடாது என்பது கூட தெரியாமல், பல நாள்களுக்கு பயன்படுத்துவோம். ஆனால், சில பொருள்களை Fridge-ல் கண்டிப்பாக வைக்கவே கூடாது. அது என்னென்ன பொருள்கள் என்பதை தெரிந்து கொள்ள, மேலே கொடுக்கப்பட்டுள்ள போட்டோஸை வலது பக்கம் Swipe பண்ணி பாருங்க. அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News January 5, 2026

மாநாட்டுக்கு பிறகு தான் கூட்டணி: கிருஷ்ணசாமி

image

புதிய தமிழகம் கட்சியின் மாநில மாநாட்டில் தான் தங்கள் கட்சி எதை நோக்கி பயணிக்கும் என்பதன் விடை தெரியும் என்று கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். தமிழக தேர்தல் களத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை சூடுபிடித்துள்ள நிலையில் அக்கட்சியின் மாநில மாநாடு ஜன.7-ம் தேதி நடைபெறுகிறது. அந்த மாநாட்டுக்கு வேறு கட்சிகளை அழைக்கவில்லை என்றும், மாநாட்டுக்கு பிறகு கூட்டணி பற்றி முடிவெடுப்போம் என்றும் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

News January 5, 2026

இவர்களுக்கு மாதம் ₹1,000 கிடைக்கும்

image

காசநோயாளிகளுக்கு மாதாமாதம் ₹1,000 நிதியுதவி வழங்குகிறது நிக்ஷய் போஷன் யோஜனா திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட TB நோயாளிக்கு சிகிச்சை முடியும் வரை உதவித்தொகை வழங்கப்படும். பயனாளிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ₹1 லட்சத்திற்கு மிகாமல் இருக்கணும். <>https://nikshay.in/Home/Index<<>> -ல் விண்ணப்பிக்கலாம். அனைவரும் பயனடைய SHARE பண்ணுங்க.

error: Content is protected !!