News April 8, 2024
₹400 லட்சம் கோடி சந்தை மதிப்பை எட்டி சாதனை

மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு ₹400 லட்சம் கோடியை முதல்முறையாக எட்டி சாதனை படைத்துள்ளது. 2014 மார்ச்சில் ₹100 லட்சம் கோடியாகவும், 2021 பிப்ரவரியில் ₹200 லட்சம் கோடியாகவும், 2023 ஜூலையில் ₹300 லட்சம் கோடியாகவும் மதிப்பு உயர்ந்திருந்தது. இதையடுத்து 9 மாதங்களுக்கு பிறகு இன்று ₹400 லட்சம் கோடியை எட்டி சாதனை படைத்துள்ளது.
Similar News
News January 20, 2026
ஜப்பான் நாடாளுமன்றம் கலைப்பு

ஜப்பானில் பொதுத்தேர்தல் பிப்.8-ல் நடக்கும் என அந்நாட்டு PM சனே டகாய்ச்சி அறிவித்துள்ளார். அதிகரித்த செலவினம், வரி குறைப்பு & ஜப்பானின் பாதுகாப்பு கட்டமைப்பு தொடர்பாக தான் எடுக்கும் முடிவுகளுக்கு மக்களின் ஆதரவு தேவை என்றும் கூறியுள்ளார். முன்கூட்டியே தேர்தல் நடத்துவது தனது அரசியல் எதிர்காலத்திற்கு ஒரு ரிஸ்க் என்ற அவர், ஜன.23-ல் ஜப்பான் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
News January 20, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஜன.20) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News January 20, 2026
ஆப்கான் காபூலில் குண்டு வெடிப்பு: 7 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடைபெற்ற குண்டு வெடிப்பில், 7 பேர் உயிரிழந்த நிலையில், 13 பேர் காயமடைந்துள்ளனர். காபூலின் வணிக பகுதியில் உள்ள ஹோட்டலை குறிவைத்து இந்த வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது. குண்டு வெடிப்புக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடம் காபூலில் மிகவும் பாதுகாப்பான பகுதியாக கருதப்படுகிறது.


