News April 22, 2024
மணிப்பூரில் 11 மையங்களில் இன்று மறு வாக்குப்பதிவு

மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்பட்ட 11 வாக்குப்பதிவு மையங்களில் இன்று மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மணிப்பூரில் உள்ள 2 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்.19ஆம் தேதி முதற்கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது இம்பால் கிழக்கு, மேற்கு மாவட்டங்களில் பல்வேறு ஓட்டுப்பதிவு மையங்களில் வன்முறை வெடித்தது. காங்கிரஸ் கட்சி புகாரைத் தொடர்ந்து மறு வாக்குப்பதிவுக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
Similar News
News April 8, 2026
விஜய் பட ரிலீஸ்.. வந்தது அப்டேட்

‘ஜனநாயகன்’ ரீலீஸ் ஆகாததால் வருத்தத்தில் உள்ள விஜய் ரசிகர்களுக்கு, மகிழ்ச்சிகரமான செய்தி ஒன்று வந்துள்ளது. சுமார் 21 ஆண்டுகளுக்கு முன்பு விஜய், அசின் நடிப்பில் வெளிவந்த சிவகாசி படம் மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தை ஏப்.24-ம் தேதி தியேட்டர்களுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. எத்தனை பேருக்கு சிவகாசி படம் பிடிக்கும்?
News April 8, 2026
முன்னாள் அமைச்சர் அதிமுகவில் இருந்து விலகினார்

அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் மத்திய இணையமைச்சருமான செஞ்சி ராமச்சந்திரன் மீண்டும் திமுகவில் இணைந்துள்ளார். வைகோ கட்சி தொடங்கியபோது திமுகவில் இருந்து விலகி மதிமுகவிற்கு சென்ற செஞ்சி ராமச்சந்திரன், 2014-ல் ஜெயலலிதா அழைப்பின்பேரில் அதிமுகவில் ஐக்கியமானார். தற்போது, விழுப்புரத்தில் ஸ்டாலின் முன்னிலையில் செஞ்சி ராமச்சந்திரன் மீண்டும் திமுகவில் இணைந்துள்ளார்.