News September 10, 2025

புல்லட் பைக்குகளின் விலையை குறைத்த RE!

image

GST 2.0 எதிரொலியாக பல கார் நிறுவனங்கள் விலையை குறைத்தன. அந்த வகையில், ராயல் என்ஃபீல்ட் நிறுவனமும் தங்களது 350CC பைக் மாடல்களின் விலையை ₹22,000 வரை குறைத்துள்ளது. இந்த விலை குறைப்பு வரும் 22-ம் தேதி அமலுக்கு வரும். எந்தெந்த மாடல்களின் விலை எவ்வளவு குறைந்துள்ளது என்பதை, மேலே Swipe செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

Similar News

News March 13, 2026

அபிஷேக் போல பந்த் மாறுவாரா?

image

கடந்த IPL-ல் LSG கேப்டன் ரிஷப் பந்த் பேட்டிங்கில் எதிர்பார்த்த அளவுக்கு விளையாட முடியாமல் சிரமப்பட்டார். இதை சரிசெய்ய யுவராஜிடம் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் மும்பையில் 4 நாட்கள் தொடர்ந்து பேட்டிங் பயிற்சி நடந்ததாக தகவல். இதற்குமுன் அபிஷேக், கில் போன்ற இளம்வீரர்களை யுவராஜ் உருவாக்கியுள்ளார். அதேபோல் பந்த், மேலும் அதிரடி பேட்ஸ்மேனாக மாறுவாரா என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

News March 13, 2026

தங்கம் விலை மளமளவென குறைந்தது

image

சர்வதேச சந்தையில் தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ் $64 (இந்திய மதிப்பில் ₹5,913) குறைந்து $5,108 ஆக உள்ளது. அதேபோல், வெள்ளி விலை 1 அவுன்ஸ் $0.44 குறைந்து $84 ஆக நீடிக்கிறது. இதே நிலை தொடர்ந்தால் இந்திய சந்தையில் இன்று தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளது.

News March 13, 2026

தேமுதிகவால் கூட்டணியில் நெருக்கடியா? பிரேமலதா

image

தேமுதிகவுக்காக, நீண்டகாலமாக கூட்டணியில் இருக்கும் மதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிப்பங்கீட்டில் திமுக நெருக்கடி கொடுப்பதாக செய்திகள் வெளியானது. இதுகுறித்து பிரேமலதாவிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, கூட்டணி கட்சிகளுக்கு எந்த நெருக்கடியும் இல்லை; எல்லா கட்சித் தலைவர்களும் தன்னுடன் நட்புடன் இருக்கிறார்கள். நீங்கள் (செய்தியாளர்கள்) சொல்வதைபோல் எந்த பிரச்னையும் இல்லை என்றார்.

error: Content is protected !!