News November 12, 2025
RDX எவ்வளவு ஆபத்தானது தெரியுமா?

உலகின் மிகவும் ஆபத்தான வெடிபொருளான RDX (Royal Demolition Explosive), இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டதாகும். இதில் சிறிய அளவு வெடித்தால் கூட ஒட்டுமொத்த ஏரியாவும் சிதைந்து போகும். அதே நேரத்தில் IED என்பது RDX, TXT அல்லது அமோனியம் நைட்ரேட் ஆகியவற்றால் நிரப்பப்பட்ட ஒரு வெடிபொருள் சாதனமாகும். இந்த அனைத்து வெடிபொருள்களை ஒப்பிடுகையில், RDX மிகவும் ஆபத்தானது.
Similar News
News November 12, 2025
போகும் போது எதையும் கொண்டு போக முடியாது..

நடிகர் அபிநய்யின் பழைய பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. உங்களிடம் பணம் இருந்தால், தேவைப்படுபவர்களுக்கு கொடுத்து உதவுங்கள். போகும் போது என்னங்க கொண்டுபோக போறோம். நம்மால் எதையும் எடுத்துட்டு போக முடியாது. ஒரு பானையில் ஒரு பிடி சாம்பலுடன் நமது வாழ்க்கை முடிந்துவிடும். அதனால், உயிருடன் இருக்கும் போது பிறருக்கு உதவுங்கள் என்று அவர் கூறுகிறார். உண்மையும் அதுதானே. #RIP
News November 12, 2025
இன்றைய நல்ல நேரம்

▶நவம்பர் 12, ஐப்பசி 26 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:00 AM – 10:30 AM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 AM ▶திதி: அஷ்டமி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶சந்திராஷ்டமம்: மூலம் ▶சிறப்பு: காலபைரவாஷ்டமி. ▶வழிபாடு: பைரவருக்கு வடைமாலை சாத்தி வழிபடுதல்.
News November 12, 2025
நேரடி வரி வருவாய் ₹12.92 லட்சம் கோடியாக அதிகரிப்பு

கடந்த ஏப்ரல் 1 முதல் நவம்பர் 10 வரையிலான, நேரடி வரி வருவாய் தொடர்பான தகவல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில், நேரடி வரி வருவாய் 7% அதிகரித்து ₹12.92 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது, கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 12.08 லட்சம் கோடியாக இருந்தது. 2025-26 நிதியாண்டில் நேரடி வரி வருவாய் ₹25.20 லட்சம் கோடியாக மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 12.7% அதிகமாகும்.


