News March 17, 2024
RCBvsDC: அரங்கம் நிறைந்த ரசிகர்கள்

டெல்லி- பெங்களூரு அணிகளுக்கு இடையேயான WPL இறுதிப்போட்டி, டெல்லியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 2 பலம் வாய்ந்த அணிகள் மோதுவதால், அருண் ஜெட்லீ மைதானம் முழுவதும் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி காணப்படுகிறது. போட்டியை காண சுமார் 23,190 பார்வையாளர்கள் இன்று மைதானத்திற்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் போட்டிக்கு இணையான ரசிகர் கூட்டத்தை, WPL தொடரும் பெற்றுள்ளது வரவேற்கத்தக்கது.
Similar News
News April 13, 2025
அண்ணாமலை கடந்துவந்த அரசியல் பயணம்..!

2019 மே 28-ல் ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்த அண்ணாமலை, அதற்கு அடுத்த ஆண்டில் அரசியலுக்குள் நுழைந்தார். பாஜகவில் இணைந்த அவருக்கு, மாநில துணைத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. இதனை அடுத்து, 2021 ஜூலை 8-ல் அக்கட்சியின் மாநிலத் தலைவராக உருவெடுத்தார். சுமார் 4 ஆண்டுகளாக வகித்த அந்த பதவியில் இருந்து தற்போது விடைபெற்ற அண்ணாமலைக்கு, தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவியை பாஜக மேலிடம் வழங்கியுள்ளது.
News April 13, 2025
ஆளே அடையாளம் தெரியாமல் போன ‘மாநகரம் ஸ்ரீ’

கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் அறிமுகமாகி, வழக்கு எண் 18/9, மாநகரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஸ்ரீ. பெரிய நட்சத்திர நடிகராக வலம்வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், ஆளே அடையாளம் தெரியாமல், மெலிந்த தேகத்துடன் இருக்கும் அவரின் PHOTO வெளியாகியுள்ளது. இதை பார்த்த நெட்டிசன்கள், சினிமா வாய்ப்பு இல்லாததால், Depression ஆகி, போதைப் பழக்கத்திற்கு அடிமையானதாக கமெண்ட் செய்கின்றனர்.
News April 13, 2025
இன்றைய பொன்மொழிகள்

தீண்டாமையை தீவிர கொள்கையாகவும், உணவு உண்பதையே தெய்வமாக கருதும் வரை நீங்கள் ஆன்மிகத்தில் முன்னேற முடியாது.
அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு.
எப்போதும் பொறாமையை விலக்குங்கள். இதுவரையிலும் நீங்கள் செய்யாத மகத்தான காரியங்களை எல்லாம் செய்து முடிப்பீர்கள்.
உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன.