News April 20, 2025
5-வது வெற்றியை பெற்ற RCB… விராட் அபாரம்..

எளிய இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூரு அணி 5-வது வெற்றியை பதிவு செய்தது. முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 157 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணியில் விராட் – படிக்கல் ஜோடி சிறப்பாக விளையாடியது. இருவரும் அரைசதம் அடிக்க, அணி எளிதாக வெற்றி பெற்றது. விராட் கோலி 73 ரன்களுடன் கடைசி வரை களத்தில் இருந்தார்.
Similar News
News January 19, 2026
நீலகிரி: ஆதார் அட்டை இருக்கா? சூப்பர் தகவல்

நீலகிரி மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்றானுமா? இதற்காக இனி அலைய வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே இங்கே <
News January 19, 2026
இயர்பட்ஸில் சத்தமா பாட்டு கேப்பீங்களா.. உஷார்!

ஒலி நன்றாக கேட்க வேண்டும் என்பதற்காக, அதிக சவுண்ட் வைத்து, இயர்பட்ஸ்/ இயர்போன்களை பயன்படுத்துவது பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது. காதில் 3 முக்கிய பாகங்கள் உள்ளன: வெளிப்புறம், நடுப்பகுதி, உட்புறம். உள்காதில் உள்ள கோக்லியா ஒலி செய்திகளை மூளைக்கு அனுப்பும். அதிக ஒலி இதை பாதித்து, செவித்திறன் பிரச்னையை ஏற்படுத்தலாம். காதுகளுக்கு அவ்வப்போது ஓய்வு கொடுங்கள். அளவுக்கு மிஞ்சினால் எதுவும் ஆபத்தே.
News January 19, 2026
மத்திய அரசுக்கு முட்டுக்கட்டை போடும் மாநில அரசுகள்: மோடி

மத்திய அரசின் நலத்திட்டங்களுக்கு முட்டுக்கட்டையாக இருந்த மாநில அரசுகளுக்கு, மக்கள் நல்ல பாடம் புகட்டியுள்ளனர் என PM மோடி பேசியுள்ளார். இதேபோல மேற்குவங்க மக்களும், மம்தா பானர்ஜியின் TMC அரசுக்கு தேர்தலில் நல்ல பாடம் புகட்ட வேண்டும் என கூறியுள்ளார். மேலும், மே.வ.வில் ஊடுருவல்காரர்கள், மாபியா கும்பலை சேர்ந்தோர் சுதந்திரமாக சுற்றித் திரிவதாகவும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் விமர்சித்துள்ளார்.


