News April 28, 2024
RCB அணி அபார வெற்றி

குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது. 201 ரன்கள் இலக்கைத் துரத்தி ஆடிய RCB அணியில் தொடக்க ஆட்டக்காரர் டு ப்ளஸி 24 ரன்னில் ஆட்டமிழந்தார். இதையடுத்து கோலியுடன் கூட்டணி சேர்ந்த ஜாக்ஸ் சிக்ஸர் மழை பொழிந்தார். கோலி 70*, ஜாக்ஸ் 100* அதிரடியால் RCB அணி 16 ஓவரில் இலக்கை எட்டி வெற்றியடைந்தது.
Similar News
News February 18, 2026
இந்தியா பிரான்ஸ் இடையே 21 ஒப்பந்தங்கள் கையெழுத்து

மும்பை வந்த பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை PM மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் பாதுகாப்பு, வர்த்தகம், சுகாதாரம், தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பாக இரு நாடுகள் இடையே 21 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. தொடர்ந்து இந்தியாவின் டாடா நிறுவனமும், பிரான்ஸின் ஏர்பஸ் நிறுவனமும் இணைந்து உருவாகியுள்ள எச்125 ரக ஹெலிகாப்டரை காணொலி வாயிலாக இருவரும் அறிமுகம் செய்து வைத்தனர்.
News February 18, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஆள்வினையுடைமை
▶குறள் எண்: 613
▶குறள்:
தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னுஞ் செருக்கு.
▶பொருள்: நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும்.
News February 18, 2026
கிரிக்கெட்டை மீட்டெடுக்க காதலியே காரணம்: ஹர்திக்

நடாஷா ஸ்டான்கோவிக் உடனான திருமண உறவை முறித்துக்கொண்ட ஹர்திக், இப்போது இந்திய மாடலான மஹிகா சர்மாவுடன் காதலில் இருக்கிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது காதலியை அவர் புகழ்ந்து தள்ளியுள்ளார். தன் கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் உற்சாகத்துடன் விளையாட முக்கிய காரணம் மஹிகா சர்மா தான் என கூறியுள்ளார். தனது காதலை வெளிப்படுத்தும் வகையில் காதலியின் பெயரின் முதல் எழுத்தான M-ஐ ஹர்திக் பச்சை குத்தியுள்ளார்.


