News April 12, 2025
ஜெர்சியை மாற்றும் ஆர்சிபி அணி..!

சிவப்பு நிற ஜெர்சியில் விளையாடிவரும் ஆர்சிபி அணி, ஒவ்வொரு சீசனிலும் ஒரு போட்டியில் பச்சை நிற ஜெர்சி அணிந்து விளையாடும். மரம் நடுதல், புவி வெப்பமயமாதலை குறைப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கம். அந்த வகையில் நாளை (ஏப். 13) ராஜஸ்தான் உடனான போட்டியில் பச்சை நிற ஜெர்சியில் பெங்களூரு விளையாட உள்ளது. நடப்பு சீசனில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடி அந்த அணி மூன்றில் வென்றுள்ளது.
Similar News
News December 8, 2025
வருகிறது ஜியோ ஏர்லைன்ஸ்.. ஒரு வருஷம் ஃப்ரீயாம்!

விரைவில் ரிலையன்ஸ் குழுமம், ஜியோ ஏர்லைன்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கவுள்ளதாம். ஜியோ சிம்மை போல, இதில் முதல் வருடம் பயணம் இலவசமாம். நம்ப முடியவில்லையா! இதுகுறித்து போஸ்டர்களும் வைரலாகியுள்ளது. ஆனால், நீங்க நம்பவே வேண்டாம். ரிலையன்ஸ் இப்படியான ஒரு அறிவிப்பை தரவே இல்லை. நெட்டிசன்களாக இப்படி ஒரு கற்பனையை சோஷியல் மீடியாவில் உலாவவிட்டுள்ளனர். உண்மையில் ஜியோ ஏர்லைன்ஸ் வந்து, ஒரு வருடம் ஃப்ரீ என்றால்..
News December 8, 2025
வரலாறு படைத்த விராட் கோலி!

ODI-ல் இந்தியாவுக்காக ஒரே ஆண்டில் அதிக ரன்களை அடித்த வீரர் என்ற பட்டியலில் கோலி உச்சம் தொட்டுள்ளார். அவர் 2010, 2011, 2012, 2013, 2014, 2016, 2017, 2018, 2025 என 9 முறை ரன் மெஷினாக செயல்பட்டுள்ளார். 2025-ல் 4 அரைசதங்கள், 3 சதங்கள் உள்பட 651 ரன்களை அவர் குவித்துள்ளார். இந்த பட்டியலில் அடுத்த இடங்களில் சச்சின், டிராவிட், ரோஹித் (தலா 3 முறை) உள்ளனர். இந்த வித்தியாசமே கோலி ஏன் கிங் என்பதை கூறுகிறது.
News December 8, 2025
புதிய ரேஷன் கார்டு.. தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் புதிதாக 55,000 பேருக்கு விரைவில் ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. புதிய ரேஷன் அட்டை கோரி 1.08 லட்சம் பேர் விண்ணப்பித்து இருப்பதாகவும், அதனை பரிசீலனை செய்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு ரேஷன் கார்டு வழங்குவதில் தாமதம் நீடிப்பதாக புகார் எழுந்த நிலையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


