News April 20, 2025
வெற்றியை நோக்கி RCB

RCB அணிக்கு முதல் ஓவரிலேயே விக்கெட் விழுந்தாலும் விராட் – படிக்கல் ஜோடி ஆட்டத்தின் போக்கை மாற்றியது. இருவரும் நிதானமாக ஆடினாலும் தேவைப்படும் நேரங்களில் பவுண்டரிகளையும் விளாசினார். 31 பந்துகளில் தேவ்தத் படிக்கல் அரை சதம் அடித்தார். 12 ஓவர்கள் முடிவில் RCB 108/1 என வலுவான நிலையில் உள்ளது. எளிய இலக்கு என்பதால் RCB வெற்றி வெகு தூரத்தில் இல்லை.
Similar News
News January 3, 2026
காங்., நடுத்தெருவில் நிற்கும்: அண்ணாமலை

காங்., 2026-ல் தேர்தல் நடக்கும்போது நடுத்தெருவில் நிற்கப் போகிறார்கள் என அண்ணாமலை கூறியுள்ளார். அதற்கான வேலைகளைத் தான் தற்போது செய்கிறார்கள் என்ற அவர், காங்கிரஸார் குதிரை பேரம் பேசுகிறார்கள், ஆட்சியில் பங்கு கேட்கிறார்கள் என்றார். மேலும், இந்த பஞ்சாயத்தை சரி செய்யவே வாரம் வாரம் TN-க்கு வரும் மேலிட பொறுப்பாளர்களுக்கு டிக்கெட் போட்டே காங்., கஜானா காலியாகிவிடும் எனவும் விமர்சித்துள்ளார்.
News January 3, 2026
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ₹5000

அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ₹5000 நிதி, ₹2 லட்சம் மதிப்பிலான காப்பீடு ஆகியவற்றை இ-ஷ்ரம் திட்டம் வழங்குகிறது. நிரந்தர வேலை, ஓய்வூதிய வசதி இல்லாதவர்களுக்கு இத்திட்டம் பெரிய உதவியாக இருக்கும். இதனை பெற 40 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ₹2 லட்சத்திற்கும் குறைவாக இருக்கணும். இந்த கார்டை பெற eshram.gov.in -ல் விண்ணப்பியுங்கள். SHARE.
News January 3, 2026
12th pass போதும்.. ₹20,000 சம்பளம்!

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தில் (UIDAI) 282 Aadhaar Supervisor/ Operator பணியிடங்கள் காலியாக உள்ளன. கல்வித் தகுதி: 12th, 10th + 2 ஆண்டுகள் ITI, 10th + 3 ஆண்டுகள் Polytechnic Diploma. சம்பளம்: ₹20,000. தேர்வு முறை: நேர்காணல் & சான்றிதழ் சரிபார்ப்பு. விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.01.2026. <


