News March 22, 2024

2024 ஐபிஎல் கோப்பையை ஆர்சிபி கைப்பற்ற வாய்ப்பு

image

2024 ஐபிஎல் கோப்பையை ஆர்சிபி அணி வெல்ல வாய்ப்பிருப்பதாக அந்த அணியின் முன்னாள் வீரர் டி வில்லியர்ஸ் கணித்துள்ளார். ஐபிஎல் துவங்கியது முதல் இதுவரை ஆர்சிபி அணி ஒரு முறை கூட கோப்பையை வென்றதில்லை. இதுகுறித்து டி வில்லியர்ஸ் கூறுகையில், “இந்த ஆண்டு மகளிர் போட்டியில் ஆர்சிபி அணி கோப்பையை வென்றது. அது போல, ஆடவர் போட்டியிலும் ஆர்சிபி கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புகள் உள்ளது” எனக் கூறியுள்ளார்

Similar News

News November 4, 2025

1,429 சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள்.. Apply பண்ணுங்க

image

தமிழக மருத்துவ பணியாளர் தேர்வாணையத்தின் கீழ் 1,429 சுகாதார ஆய்வாளர் (கிரேட் 2) காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ இயக்குநரால் வழங்கப்பட்ட இரண்டு வருட பல்நோக்கு சுகாதார ஆய்வாளர் பாடநெறி சான்றிதழை பெற்றிருக்க வேண்டும். மெரிட் அடிப்படையிலான தேர்வு முறைக்கு வரும் 16-ம் தேதிக்குள் mrb.tn.gov.in தளத்தில் விண்ணப்பிக்கவும்.

News November 4, 2025

கண்ணதாசன் பொன்மொழிகள்!

image

*அளவுக்கு மிஞ்சிய சாமர்த்தியம், முட்டாள்தனத்தில் போய் முடியும். *நிலத்தில் வரும் களைகள் பெரிய மரங்களாவதில்லை, அற்ப ஆசைகள் பெரிய வெற்றியை தேடித் தருவதில்லை. *எப்படியாவது சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், சம்பாதித்த பணத்தை அனுபவிக்காமலே மாண்டு போகிறார்கள். *துன்பங்களை வளர்ப்பதும் தனிமைதான். தணிப்பதும் தனிமைதான். *அதிர்ஷ்டத்தின் மூலம் அறிவைப் பெற முடியாது, அறிவின் மூலம் அதிர்ஷ்டத்தை பெறலாம்.

News November 4, 2025

BREAKING: கோவை சம்பவத்தில் 3 பேரை சுட்டுப்பிடித்த போலீஸ்

image

கோவையில் மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரை தனிப்படை போலீசார் சுட்டுப்பிடித்தனர். CCTV காட்சிகளின் அடிப்படையில் தேடுதல் வேட்டை நடத்திய தனிப்படை போலீசார் குணா தவசி, சதீஸ், கார்த்திக் காளீஸ்வரன் ஆகியோரை துடியலூர் பகுதியில் சுற்றி வளைத்தனர். தாக்குதல் நடத்தி 3 பேரும் தப்பிக்க முயன்றதால் காலில் சுட்டுப்பிடித்ததாக போலீஸ் கூறுகிறது. 3 பேரும் கோவை அரசு ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!