News April 18, 2025
அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்கும் RCB

PBKS அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், முதல் 4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது RCB அணி. டாஸ் வென்ற PBKS அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தார். இதனையடுத்து பேட்டிங்கை தொடங்கிய RCB அணியின் வீரர்கள் சால்ட் (4), கோலி (1), லிவிங்ஸ்டன் (4) என்று அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தற்போது, RCB 4 ஓவர்களுக்கு 26-3 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
Similar News
News April 19, 2025
REWIND: தேர்தலில் போட்டி என ரஜினி அறிவித்த நாள்

ரஜினியின் வாழ்க்கையில் முக்கிய நாள்களில் இன்றைய (ஏப்.19) நாளும் ஒன்று. இந்த நாளில்தான், 2019ம் ஆண்டு ஏப்ரல் 19-ம் தேதி, 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் தனது இலக்கு இல்லை, 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல்தான் தனது இலக்கு, அந்தத் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன் என்று அவர் கூறினார். எனினும் பிறகு கொரோனா பாதிப்பை சுட்டிக்காட்டி, அந்த முடிவை ரஜினிகாந்த் வாபஸ் பெற்றார்.
News April 19, 2025
IPL 2025: DC முதலில் பேட்டிங்

IPL 2025-ல் அகமதாபாத்தில் நடைபெறும் மேட்ச்சில், GT அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இதுவரை இரு அணிகளும் 5 முறை மோதியுள்ளன. அவற்றில் 3-ல் DC-யும், 2-ல் GT-யும் வெற்றி பெற்றுள்ளன. இந்த போட்டியில் யார் வெற்றி பெறுவாங்க என நினைக்குறீங்க?
News April 19, 2025
₹49,000 வரை சம்பளம்.. மத்திய அரசில் 200 காலியிடங்கள்!

மத்திய அரசின் இந்தியா நிலக்கரி நிறுவனத்தில் இருக்கும் 200 டெக்னீசியன் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதற்கு, 18 முதல் 30 வயதுக்குட்பட்ட 10வது, ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு நடைபெறும். மாதம் ₹49,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு மே 10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முழு தகவலுக்கு <