News April 7, 2025
முதலில் பேட்டிங் செய்கிறது RCB

முக்கியமான ஐபிஎல் போட்டியான இன்று, RCB அணியும் MI அணியும் மோதுகின்றன. இதில், டாஸ் வென்ற MI அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, பெங்களூரு அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்துள்ளார். உலகளவில் அதிக ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட இரண்டு அணிகள் மோதுவதால், இன்றைய போட்டிக்கு அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.
Similar News
News April 8, 2025
ஜெயிலுக்கு போகவும் தயார்: பா.ரஞ்சித்

இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள ‘சந்தோஷ்’ மற்றும் ‘நசீர்’ படங்களை பொதுவெளியில் திரையிட்டு சிறைக்கு செல்லவும் தயாராக இருப்பதாக பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். சாதி, மத பாகுபாட்டை உரக்க சொல்லும் இப்படங்களை திரையிடுவது பெரிய குற்றம் ஒன்றும் இல்லை எனவும், ஏற்கனவே திரையிட திட்டமிடப்பட்டிருந்த நிலையில், லைசன்ஸை கேன்சல் செய்துவிடுவதாக பிரசாத் லேப் அச்சுறுத்தபட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
News April 8, 2025
தம்பியின் கண்முன்னே 10 வயது சிறுமி தற்கொலை!

தாய் திட்டியதற்காக 10 வயது சிறுமி, தம்பியின் கண்முன்னே தற்கொலை செய்து கொண்ட அவலம் அரங்கேறியுள்ளது. சென்னையை சேர்ந்த கெளசல்யா கூலி வேலைக்கு சென்ற நிலையில், தனது மகளிடம் வீட்டு வேலையை செய்யக் கூறியுள்ளார். ஆனால், அதனை செய்யாமல் சிறுமி, விளையாடிக் கொண்டிருந்ததை தாய் கண்டித்துள்ளார். இதனால், மன உளைச்சலிலிருந்த ரோஷினி (10) தனது 5 வயது தம்பியின் கண்முன்னே உயிரை மாய்த்துக்கொண்டார். பெரும் சோகம்..!
News April 8, 2025
IPL BREAKING: RCB அணி த்ரில் வெற்றி

மும்பை அணிக்கு எதிரான த்ரில்லான ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றிருக்கிறது. இப்போட்டியில் முதலில் விளையாடிய பெங்களூரு அணி மும்பை அணிக்கு 222 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதனை சேஸ் செய்து ஆடிய மும்பை அணி வீரர்கள் பாண்டியா & திலக் வர்மாவின் அதிரடியால் மும்பை வெற்றி பெறும் நிலை ஏற்பட்டது. ஆனால், இறுதியில் விக்கெட்டுகளை மளமளவென சரிந்ததால் இறுதி ஓவர் வரை போராடி மும்பை தோல்வியைத் தழுவியது.