News March 30, 2024
அரிய சாதனை படைத்தது RCB

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் KKR அணிக்கு எதிரான 9ஆவது லீக் போட்டியில், RCB அணி அரிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளது. அதாவது, IPL வரலாற்றில் 1,500 சிக்ஸர்களை கடந்த 2ஆவது அணி என்ற பெருமையை RCB பெற்றது. இந்த பட்டியலில் இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணி (1,548) மட்டுமே உள்ளது. இந்தப் போட்டியில் கோலியுடன் இணைந்து கிரீன் தலா நான்கு சிக்ஸர்களை அடித்து இந்த புதிய சாதனையைப் படைத்துள்ளனர்.
Similar News
News November 8, 2025
இந்திய அணியில் சா பூ திரி விளையாட்டு?

ஒவ்வொரு போட்டிக்கும் இந்தியாவின் பேட்டிங் ஆர்டர் தேவையின்றி மாற்றப்படுவதாக ரசிகர்கள் கருதுகின்றனர். 1, 3-வது டி20-ல் சூர்யகுமார் ஒன் டவுன் வீரராக களமிறங்க, அதே வரிசையில் 2-வது டி20-ல் சாம்ஸன், 4-வது டி20-ல் துபே களமிறங்கினர். இதில் சஞ்சு 2 ரன்களுக்கு அவுட் ஆனதால், அடுத்த போட்டியில் டிராப் செய்யப்பட்டார். இப்படி செய்வது ஃபார்மில் இருக்கும் வீரர்களை பாதிக்கும் என்று ரசிகர்களும் தெரிவிக்கின்றனர்.
News November 8, 2025
பிக்பாஸ் ஒரு ஆபாசமான நிகழ்ச்சி: வேல்முருகன்

விஜய் சேதுபதி நடத்தும் பிக்பாஸ் தமிழை மிகவும் அருவருக்கத்தக்க, ஆபாசமான நிகழ்ச்சி என்று வேல்முருகன் விமர்சித்துள்ளார். இதில் விஜய் சேதுபதிக்கும் தனக்கு எந்தவித தகராறும் இல்லை என்றும், இது குடும்ப உறவுமுறையை சிதைக்கும் நிகழ்ச்சி எனவும் அவர் கூறியுள்ளார். இந்த விஷயத்தில் பொதுமக்களின் கருத்தை அறிந்த பிறகே நிகழ்ச்சிக்கு தடை கோரி போராட்டத்தை முன்னெடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
News November 8, 2025
தமிழை வைத்து தமிழர்களை சுரண்டும் திமுக: நயினார்

தேர்தல் வாக்குறுதிபடி காளை வளர்ப்போருக்கு மாதம் ₹1,000 ஊக்கத்தொகையை திமுக வழங்காதது ஏன் என நயினார் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழை வைத்து தமிழர்களைச் சுரண்டி திமுக ஆட்சியை பிடித்ததாக சாடியுள்ள அவர், CM ஸ்டாலினின் அரசு மாடுபிடி வீரர்களுக்கான பரிசுத் தொகையை நிறுத்திவிட்டதாகவும் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக, திமுக அரசு இன்றுவரை வாய்திறக்க மறுப்பதாகவும் நயினார் தெரிவித்துள்ளார்.


