News May 25, 2024

RCB அணியை வீழ்த்தினால் கோப்பை கிடையாது

image

ப்ளே-ஆஃப்பில் RCB அணியை வீழ்த்திய எந்த அணியும், ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. ஆம், ▶2010இல் MI அணி CSK-விடம் இறுதிப் போட்டியில் தோற்றது. ▶2015இல் CSK அணி இறுதிப் போட்டியில் MI இடம் தோற்றது. ▶2020இல் SRH அணி Qualifier 2இல் DC இடம் தோற்றது. ▶2021இல் KKR அணி இறுதிப் போட்டியில் CSK இடம் தோற்றது. ▶2022இல் RR அணி இறுதிப் போட்டியில் GT இடம் தோற்றது. ▶2024இல் RR அணி Qualifier 2இல் SRH இடம் தோற்றது.

Similar News

News April 1, 2026

விஜய் உயிருக்கு ஆபத்து.. தவெக சார்பில் பரபரப்பு புகார்

image

தவெக கூட்டத்திற்கு போலீசார் உரிய பாதுகாப்பு அளிப்பதில்லை என தேர்தல் அதிகாரியிடம் ஆதவ் அர்ஜுனா புகார் அளித்துள்ளார். சென்னையில், நேற்று பாட்டில்களை வீசியது திட்டமிட்ட செயல் எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதனிடையே, ‘Y’ பரிவு பாதுகாப்பிலிருந்தும் விஜய்யின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் இருப்பதால் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என அமித்ஷாவுக்கு நிர்மல் குமார் கடிதம் எழுதியுள்ளார்.

News April 1, 2026

நம்பிக்கை இல்லாதவனே 2 தொகுதிகளில் போட்டி: சீமான்

image

2 தொகுதிகளில் போட்டியிடுவது மக்கள் விரோத செயல் என்று விஜய்யை சீமான் விமர்சித்துள்ளார். தன்னையும் மக்களையும் நம்பாதவனே 2 தொகுதிகளில் போட்டியிடுவான் என்றும், முதலில் தன் மீது Confident வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இதுவரை 2 தேர்தல்களில் தோற்றாலும், தற்போதும் ஒரு தொகுதியிலேயே தானும், தனது தொண்டர்களும் போட்டியிடுவது பெருமை என்றும் சீமான் தெரிவித்துள்ளார். உங்கள் கருத்து? <<-se>>#TNElection2026<<>>

News April 1, 2026

அவசர கதியில் தொகுதி பங்கீடு.. திருமா புதிய விளக்கம்

image

ஆளூர் ஷா நவாஸுக்கு சீட் கொடுக்காதது விவாதமான நிலையில், திருமாவளவன் விளக்கமளித்துள்ளார். ஒரு இஸ்லாமியருக்கு சீட் என்ற முறையில் அப்துல் ரகுமானுக்கு கொடுக்கப்பட்டது. இதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்று திருமா கூறியுள்ளார். ஷா நவாஸ் விரும்பிய பல்லாவரம் தொகுதியை கேட்டதற்கு பண்ருட்டியும், கேட்காத கள்ளக்குறிச்சி தொகுதியையும் திமுக கொடுத்தது என்றும், அவசரகதியில் தொகுதிகள் அளித்ததாகவும் குறிப்பிட்டார்.

error: Content is protected !!