News October 26, 2025
RBI அதிரடி அறிவிப்பு.. நீங்களும் ₹40 லட்சம் வெல்லலாம்!

‘பாதுகாப்பான வங்கி- அடையாளம், நேர்மை, சமவாய்ப்பு’ என்ற கருப்பொருளில் கீழ் RBI ‘HaRBInger 2025’ ஹேக்கத்தான் போட்டியை அறிவித்துள்ளது. Tokenised KYC, Offline CBDC (Digital Currency), enhancing trust போன்றவற்றில் உள்ள சிக்கல்களுக்கு தொழில்நுட்ப ரீதியில் தீர்வுகளை கண்டுபிடிக்க வேண்டும். வெற்றி பெறுபவருக்கு முதல் பரிசாக ₹40 லட்சமும், 2-வது பரிசாக ₹20 லட்சமும் வழங்கப்படும். யாரு இந்த போட்டிக்கு ரெடி?
Similar News
News October 28, 2025
மருத்துவ சின்னங்களில் ஏன் பாம்பு உள்ளது தெரியுமா?

உலகளவில் மருத்துவ சின்னங்களில் பாம்பு இடம்பெற்றிருக்கும். WHO-வின் Logo-விலும் பாம்பு இருப்பதை நம்மால், பார்க்க முடியும். ஆனால், பாம்புக்கும், மருத்துவத்துக்கும் என்ன சம்பந்தம் என தெரியுமா? கிரேக்க புராணங்களின் படி, மருத்துவ தெய்வமான அஸ்கிளேபியஸ்(Asclepius) கையில் பாம்பு சுற்றிய தடியை (Rod of Asclepius) வைத்திருந்தார். அதன் வெளிப்பாடாகவே மருத்துவ சின்னங்களில் பாம்பு இடம்பெறுவதாக கூறப்படுகிறது.
News October 28, 2025
BREAKING: தவெகவில் அதிரடி மாற்றம்.. விஜய் எடுத்த முடிவு

தவெகவில் அமைப்பு ரீதியாக பல்வேறு மாற்றங்களை செய்ய விஜய் திட்டமிட்டுள்ளார். தான் செய்ய உள்ள மாற்றங்களுக்கு உடனடியாக நிர்வாகிகளிடம் ஒப்புதல் பெற அடுத்த வாரம் அவசர பொதுக்குழுவை கூட்டுகிறார். இது, சென்னை (அ) மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக கரூரில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாகவும், கட்சியின் அடுத்தகட்ட பணிகள் குறித்தும் இக்கூட்டத்தில் அவர் ஆலோசனை நடத்த உள்ளார்.
News October 28, 2025
விக்கிப்பீடியாவுக்கு போட்டியாக வந்தாச்சு GrokiPedia

விக்கிப்பீடியாவுக்கு போட்டியாக Grokipedia என்கிற வலைதளத்தை எலான் மஸ்க்கின் xAI நிறுவனம் தொடங்கியிருக்கிறது. விக்கிபீடியாவில் மனிதர்கள் எழுதி, திருத்துவதால் தவறுகள் இருக்கலாம். ஆனால் Grokipedia-ல் Grok Al-யால் சரிபார்க்கப்பட்ட பதிவுகள் மட்டுமே இருக்கும் என்பதால் நம்பகமாக இருக்கும் என மஸ்க் தெரிவித்துள்ளார். இந்த புதிய AI-ஐ பயன்படுத்த இங்க <


