News October 13, 2024
₹200 நோட்டுகளை திரும்ப பெற்ற RBI : காரணம் என்ன?

₹2,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்ட நிலையில், தற்போது ₹137 கோடி மதிப்புள்ள ₹200 நோட்டுக்களை RBI திரும்பப் பெற்றதாக கூறப்படுகிறது. இதனால், ஒட்டுமொத்தமாக ₹200 நோட்டுகள் திரும்பப் பெறப்படுமா அல்லது செல்லாதவை என அறிவிக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், ₹200 நோட்டுக்கள் அதிக தேய்மானம் அடைந்ததுடன் கிழிந்ததால் அவை திரும்பப் பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Similar News
News August 10, 2025
சங்கை அறுப்போம்… கமலுக்கு துணை நடிகர் கொலை மிரட்டல்

சனாதனத்துக்கு எதிராக பேசிய கமல்ஹாசனின் சங்கை அறுப்போம் என துணை நடிகர் ரவிச்சந்திரன் மிரட்டல் விடுத்துள்ளார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து மக்கள் நீதி மய்யத்தின் துணைத்தலைவரும் ஓய்வு பெற்ற ஐஜி-யுமான மவுரியா காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அகரம் நிகழ்ச்சியில் பேசிய கமல் சனாதன சங்கிலிகளை உடைக்கும் ஒரே ஆயுதம் கல்வி என கமல் கூறியிருந்தார்.
News August 10, 2025
தூய்மை பணியாளர்களுக்கு சீமான் ஆதரவு

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களை சீமான் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். தூய்மை பணியை தனியாரிடம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன என கேள்வி எழுப்பிய சீமான் தூய்மை பணியாளர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் அரசை கேட்டுக்கொண்டார்.
News August 10, 2025
சிம்பு, வெற்றி மாறன் படம் கைவிடப்பட்டதா?

சிம்பு – வெற்றி மாறன் இணைந்துள்ள புதிய படத்தின் புரோமோவுக்கான படப்பிடிப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது. ஆனால் அடுத்தக்கட்டத்துக்கு படம் நகரவில்லை. இதனால் படம் கைவிடப்பட்டதாக ஒரு செய்தி பரவியது. இதனிடையே பேட்டி ஒன்றில் படத்தின் அறிவிப்பு புரோமோ விரைவில் வெளியாகும் என வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். ஷூட்டிங் உடனடியாக ஆரம்பிக்க போவதாகவும் அப்டேட் கொடுத்து சிம்பு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.